• Apr 04 2025

மாபெரும் எதிர்பார்ப்புடன் உருவான 'சிக்கந்தர்' படம் எப்போது ரிலீஸாகுது தெரியுமா?

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளம் கொண்டு சினிமாவுக்காக மாஸ் சிந்தனைகளையும் வழங்கும் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக ஏ.ஆர். முருகதாஸ் உள்ளார். இவர் இயக்கிய தீனா , ரமணா, துப்பாக்கி , கத்தி மற்றும் சர்கார் என அனைத்து படங்களும் மாஸ் கலந்த வெற்றிப் படங்களாக மாறியுள்ளன.

இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் புதிய படமான ‘சிக்கந்தர்’ பாலிவூட் ஸ்டைலில் ஆக்‌ஷன் மற்றும் பிளாக்பஸ்டராகும் எனக் கூறப்படுகின்றது. பாலிவூட்டின் கிங் சல்மான் கான், இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கின்றார். இதுவே முருகதாஸுக்கும் சல்மானுக்கும் இடையேயான முதல் கூட்டணி என்பதாலும், இந்தப் படம் பாலிவூட் மட்டுமல்லாமல் இந்திய சினிமா உலகமே எதிர்பார்க்கும் படமாக மாறியுள்ளது.


இந்தப் படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி எனப் பல மொழிகளில் வலம் வரும் இயக்குநர் தற்போது பாலிவூட்டிலும் முக்கியத்துவம் பெற்று வருகின்றார். ஏப்ரல் 30ம் திகதி, ரம்ழான் பண்டிகையை முன்னிட்டு இந்தப் படம் உலகளவில் ரிலீஸ் ஆகின்றது. ஹிந்தி மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாவது இந்தப் படத்தின் முக்கிய சிறப்பம்சம் ஆகும்.

இந்நிலையில் ரசிகர்களை இன்னும் ஆவலாக்கும் செய்தி ஒன்று தற்பொழுது வெளியாகியுள்ளது. பலர் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ‘சிக்கந்தர்’ படத்தின் டிரெய்லர் நாளை வெளியாக உள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement