• Dec 27 2024

கூல் சுரேஷ் ஹீரோவாக களமிறங்கவுள்ள படம் எது தெரியுமா? மாஸ் தகவல்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் செல் அம் இயக்கத்தில் டிடிஎஃப் வாசன் ஹீரோவாக நடிக்கவிருந்த திரைப்படம் தான் மஞ்சள் வீரன். இந்த படத்தில் யூடியூப் பிரபலமான டிடிஎஃப் வாசன் ஹீரோவாக நடிப்பதற்கு ஒப்பந்தமானார். ஆனாலும் தற்போது இந்த படத்தில் இருந்து டிடிஎஃப் வாசனை தூக்கி உள்ளதாக அதன் இயக்குனர் சமீபத்தில் அறிவித்து இருந்தார்.

யூடியூப் சேனலில் சுமார் 40 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் டிடிஎஃப் வாசனை பின் தொடர்ந்து வருகின்றார்கள். அவர் வேகமாக பைக் ஓட்டியே வீடியோ வெளியிட்டு பிரபலமானவர். இதனால் இளசுகள் பலர் அவருக்கு ரசிகராக காணப்படுகின்றார்கள். அடிக்கடி போலீசில் சிக்கிக்  கொள்ளும் நபராகவும் காணப்படுகின்றார் வாசன்.

மஞ்சள் வீரன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் அந்தப் படத்தில் இருந்து டிடிஎப் வாசனை நீக்குவதாக இயக்குனர் அறிவித்தார். ஆனால் இது தொடர்பில் பேசிய டிடிஎப்  வாசன் இயக்குனர் என்னை படத்தில் இருந்து நீக்கியதே எனக்குத் தெரியாது. அவர் ஒரு முறை கூட என்னிடம் பேசவில்லை. மஞ்சள் வீரன் படத்தின் போட்டோ சூட் மட்டுமே நடந்தது. பட பூஜைக்கு கூட நான் பணம் செலவு செய்தேன். 


அந்த பணத்தையும் கேட்க மாட்டேன். அவர் என்னிடம் சொல்லாமல் நேரடியாகவே மீடியாவிடம் சொல்லி என்னை நீக்குவதாக தெரிவித்துள்ளார். பலமுறை தொடர்பு கொண்ட போதும் அவர் எனது அழைப்பை எடுக்கவில்லை என்று வேதனை  தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மஞ்சள் வீரன் படத்தில் ஹீரோவாக நடிப்பதற்கு பிக் பாஸ் புகழ் கூல் சுரேஷ் களமிறங்கி உள்ளார். இதனை பேட்டி  ஒன்றின் போது அவரே தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே இந்த படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்கஇருந்த கூல் சுரேஷ் தற்போது ஹீரோவாக களமிறங்க உள்ளாராம். இதற்கான அறிவிப்பு அக்டோபர் 15ஆம் தேதி வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார். தற்போது தகவல் வைரலாகி வருவதோடு கூல் சுரேஷ்க்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement