• Dec 26 2024

கணவர் மீது கொண்ட காதலால் குடிக்கு அடிமையான டிஸ்கோ சாந்தி! நெஞ்சை உருகவைக்கும் பின்னணி

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

80 மற்றும் 90 ஆம் ஆண்டுகளில் முன்னணி நடிகையாக காணப்பட்டு, ஏராளமான நடிகர்களுடன் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டு பிரபலமான நடிகை தான் டிஸ்கோ சாந்தி. இவர் தெலுங்கு நடிகரான ஸ்ரீஹரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பழம்பெரும் நடிகர் ஆனந்தன் மகள் தான் டிஸ்கோ சாந்தி. இவர் ஐட்டம் பாடலுக்கு என்றே பெயர் போனவர். அவருடைய அப்பா இறந்த பிறகு வறுமையின் காரணமாக மிகவும் கஷ்டப்பட்ட நிலையில் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக ஏழு வயதிலேயே சினிமாவுக்கு வந்துள்ளார்.

ஆரம்பத்தில் நாயகியாக நடித்தார். அது கை கொடுக்காத நிலையில் ஐட்டம் பாடல்களுக்கு வாய்ப்பு கிடைத்த அதை பயன்படுத்திக் கொண்டார். அதன் பின்பு அதனையே தன்னுடைய கேரியராக மாற்றினார். ரஜினிகாந்த் கமலஹாசன் உட்பட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

1996 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகரான ஸ்ரீஹரியை காதலித்து திருமணம் செய்தார். திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகி குடும்பத்தோடு செட்டில் ஆனார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ஒரு கட்டத்தில் அவருடைய கணவர் ஸ்ரீஹரி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில் கணவர் இறந்த காரணத்தால் வீட்டை விட்டு அதிகமாக வெளியே வருவதில்லை என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.


அதன்படி அவர் மேலும் கூறுகையில், தனது கணவரின் மறைவுக்குப் பிறகு தனக்கு வாழவே பிடிக்கவில்லை. கணவரின் மறைவு என்னை மனதளவில் பாவித்தது. படுத்தால் தூக்கமே வராது. தினமும் குடித்துவிட்டு தான் தூங்குவேன். அவர் உயிரோடு இருக்கும்போது இருவரும் சேர்ந்து பிறந்தநாள், பார்ட்டி என்றால் ஒன்றாக குடிப்போம். ஆனால் அவர் உயிரோடு இல்லாததை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காலையில் எழுந்து சின்ன சின்ன வேலைகளை செய்வேன். பிறகு குடித்துவிட்டு மீண்டும் தூங்கிடுவேன். இப்படியே குடித்து குடித்து எனது உடல் நிலை மோசமாகிவிட்டது.

இப்படியே குடித்தால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்று சொல்லிவிட்டார்கள். இதனால் எனது இரண்டு மகன்களும் கண்ணீர் விட்டு அழுதார்கள். அப்பாவும் இல்லை நீயும் போய்விட்டால் எங்களுக்கு யார் இருக்கின்றார் என்று அழுதார்கள். அதன் பிறகு தான் குடியை நிறுத்தினேன். அவர்கள் சண்டை போட்டிருந்தால் இல்லை திட்டி நான் குடிப்பதை நிறுத்தி இருக்க மாட்டேன். ஆனால் அவர்கள் அழுதது என்னை மாற்றிவிட்டது. இப்போ அன்றிலிருந்து நான் குடிப்பதை நிறுத்தி விட்டேன் என்று டிஸ்கோ சாந்தி கூறியுள்ளார்.

Advertisement

Advertisement