• Dec 25 2024

9வது வாரம் நாமினேஷனில் இடம் பிடித்துள்ள ஹவுஸ்மேட்ஸ் யார் யார் தெரியுமா?- வெளியாகிய நேம் லிஸ்ட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் 6 சீசன்களை சிறப்பாக நிறைவு செய்துவிட்டு தற்போது 7வது சீசனின் என்ட்ரி கொடுத்துள்ளது. இந்த நிகழ்ச்சி கடந்த மாதம் 1ம் தேதி 18 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் போட்டியாளர்களை கலக்கலாக அறிமுகம் செய்திருந்தார்  கமல்ஹாசன். என்றபோதிலும் நிகழ்ச்சியின் முதல் வாரத்திலேயே போட்டியிலிருந்து ஒரு போட்டியாளர் எலிமினேட் ஆனார்.இந்நிலையில் அடுத்தடுத்த போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நிலையில் தற்போது 10 போட்டியாளர்கள் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியுள்ளனர்.


 மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு 5 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் மூலம் என்ட்ரி கொடுத்துள்ளனர். இரு வாரங்களுக்கு முன்பு போட்டியாளர் பிரதீப் நிகழ்ச்சியிலிருந்து ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் ரசிகர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. கமலின் இந்த செயல் பல்வேறு கேள்விகளை உண்டு செய்தது.

 விரைவில் 3 போட்டியாளர்கள் மீண்டும் 3 போட்டியாளர்கள் வைல்ட் காட் என்ட்ரியாக உள்ளே நுழைய இருக்கிறார்கள் என்று கூறப்படுகின்றது. வினுஷா, விஜய் வர்மா, அனன்யா எஸ் ராவ் ஆகிய மூவருமே உள்ளே வரவுள்ளனர்.


இந்த நிலையில் இந்த வார எலிமினேஷன் நாமினேஷனில்அக்ஷயா, அர்ச்சனா, மணி, பிராவோ, ஐஸ்வர்யா, பூர்ணிமா, மாயா, ரவீனா மற்றும் சுசித்ரா ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement