• Dec 26 2024

இந்தியாவில் முதலாவது பணக்கார நடிகர் யார் தெரியுமா?- அப்போ சூப்பர் ஸ்டார் ரஜினி இல்லையா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

இந்தியாவைப் பொறுது்த வரையில் ஏனைய தொழில்களை விட சினிமாவின் மூலம் அதிகளவான பணத்தை சம்பாதித்து வரும் பிரபலங்களை அதிகமாகக் காணப்படுகின்றனர்.இந்த நிலையில் இந்தியாவின் பணக்கார நடிகர்கள் யார் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

முதலாவது பணக்காரர் கொனிடேலா சிவசங்கர வரபிரசாத், அதாவது மெகா ஸ்டார் சிரஞ்சீவி தானாம். இவரது சொத்து மதிப்பு ரூ.1666 கோடியாம்.தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளின் திரையுலகில் இரண்டாவது பெரிய பணக்காரர் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தான். 


ஆர்ஆர்ஆர்-ன் ஆஸ்கார் வெற்றி பெற்ற பிறகு உலகளாவிய பரபரப்பாக மாறிய  இவரது சொத்து மதிப்பு  $175 மில்லியன் என்று சொல்லப்படுகின்றது.மூன்றாவது நடிகர்  நாகார்ஜுனா, இவரது சொத்து மதிப்பு சுமார் $123 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் 20 பணக்கார நடிகர்களில், தென்னிந்தியாவின் மற்ற பெயர்கள் ஜூனியர் என்டிஆர், தளபதி விஜய் மற்றும் ரஜினிகாந்த். அவர்களின் நிகர மதிப்பு முறையே $60 மில்லியன், $56 மில்லியன் மற்றும் $55 மில்லியன் ஆகும்.


இந்தப் பட்டியலில் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் மற்றும் கரீனா கபூர் கான் ஆகியோர் முறையே $75 மில்லியன், $60 மில்லியன் மற்றும் $60 மில்லியன் என மூன்று நடிகைகளும் இடம்பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement