• Dec 25 2024

சிறகடிக்க ஆசை சீரியல் முத்துவின் பாட்டி யார் தெரியுமா?- கதாநாயகியாகவும் நடித்திருக்கின்றாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் நடிக்கும் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவையாகவே இருக்கின்றன. அந்த வகையில் இதில் முத்துவின் பாட்டி காரெக்டரில் நடித்து வருபவர் குறித்து தான் தற்பொழுது பார்க்கலாம் வாங்க.

இந்த சீரியலில் மீனாட்சி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் இவரது இயற்பெயர் ரேனுகா ஆகும். இவர் குழந்தை நட்சத்திரமாகவே சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார். தொடர்ந்து 1966ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான தனிப் பிறவி திரைப்படத்தில் எம்.ஜி.ஆரின் தங்கையாக நடித்திருந்தார்.


தொடர்ந்து சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்திருக்கின்றார். பஞ்சவர்ணக்கிளி,காக்கும் கரங்கள் போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார்.தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வந்தார்.

40 வருடங்களாக சினிமாவிலிருந்து விலகியிருந்த இவர் அம்மாவின் கைபேசி என்ற படத்தின் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுத்தார். இப்படத்தில் சிறப்பாக நடித்ததன் காரணமாக சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்திருக்கின்றது.இதைத் தொடர்ந்த சில திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இதனை அடுத்து பல சீரியல்களில் நடித்திருந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய மௌனராகம் சீரியல் தான் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த சீரியலில் பார்வதி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.


இதனை அடுத்து தமிழும் சரஸ்வதியும், சிறகடிக்க ஆசை போன்ற சீரியல்களில் நடித்து வருகின்றார். அதிலும் சிறகடிக்க ஆசை சீரியலில் இவரது எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement