• Dec 26 2024

சில்க் ஸ்மிதாவின் பயோபிக்கில் நடிக்கப் போகும் பிரபல நடிகை யார் தெரியுமா?- வெளியாகிய பெஸ்ட் லுக் போஸ்டர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 80களில் முக்கியமான நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சில்க் ஸ்மிதா. தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் 450-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

சில்க் சுமிதாவின் இயற்பெயர் விஜயலட்சுமி என்பது பலருக்கும் தெரியாது. அவர் முதல் திரைப்படத்தில் சில்க் என்கிற கதாபாத்திரத்தில் அறிமுகமாகி அந்த பெயரையே இவருடைய பெயருக்கு முன்பு வந்து அதைத் தொடர்ந்து ஸ்மிதா என்கிற புனைப்பெயரில் மலையாளத்தில் அறிமுகமானதால் சில்க் ஸ்மிதா என்றே இவர் தன்னுடைய பெயரை மாற்றி இருந்தார்.

17 வருடம் சினிமாவில் இருந்த இவர் இறந்து கிட்டத்தட்ட தற்பொழுது 25 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனாலும் தற்பொழுதும் இவரை ரசிகர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர்.


இன்று டிசம்பர் 2 நடிகை சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாள் ஆகும். அத்தோடு விரைவில்  சில்க் வாழ்க்கை வரலாற்று படம் உருவாக இருக்கிறது. அதில் சில்க் ஆக சந்திரிகா ரவி நடிக்க இருக்கிறார்.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கவர்ச்சி பேயாக நடித்து இருந்தவர் சந்திரிகா ரவி தான்.. ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்த அவர் தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கிறார். இது குறித்த புகைப்படம் தற்பொழுது வெளியாகியுள்ளதைக் காணலாம்.

Advertisement

Advertisement