• Dec 27 2024

நீங்க பண்ணினதும் நாடக காதலா? ரஞ்சித்துக்கு செருப்படி கேள்வி கேட்ட நெட்டிசன்கள்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெற்றிமாறன், மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் ஆகியோர் முக்கிய இயக்குனர்களாக வலம் வருகின்றார்கள். இவர்கள் தங்களது படத்தில் ஒடுக்கப்பட்ட குரலையும் , சாதி பார்க்கக் கூடாது என்ற கருத்தையும் ஓங்கி ஒலிக்கச் சொல்லி இருப்பார்கள். இவர்களது படத்திற்கு ஆதரவு இருந்தாலும் எதிர்ப்புகளும் வரத்தான் செய்கின்றன.

அந்த வகையில் நடிகர் ரஞ்சித் பாண்டவர் பூமி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் தற்போது கவுண்டம்பாளையம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதன் டெய்லர் கடந்த மாதம் வெளியானது.

அதில் குறிப்பிட்ட சாதியினரையும் கட்சித் தலைவரையும் கடுமையாக விமர்சனம் செய்து காட்சிகளை எடுத்துள்ளார். மேலும் அதில் நாடகக் காதல் என்று சொல்லையும் பயன்படுத்தியுள்ளார். இந்த ட்ரெய்லர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது.

இதைத்தொடர்ந்து தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்த நடிகர் ரஞ்சித், ஓசிக பற்றிய ஒரு பகுதியை சென்சார் போர்டில் நீக்கிவிட்டார்கள். அதற்காக நான் எவ்வளவோ போராடினேன். சரியான காதல் என்றால் பெற்றோர் நிச்சயமாக சம்மதிப்பார்கள். நான் காதலுக்கு எதிரி இல்லை. பெற்றோரை எதிர்த்து செய்யும் திருமணங்களால் தான் விபரீத சம்பவங்கள்நடக்கின்றன. பெற்றோரும் இந்த அவமானத்தால் உயிரிழந்து கொள்கின்றார்கள்.


மேலும் பெற்றோர் சம்மதம் இல்லாமல் காதல் திருமணம் செய்யக்கூடாது என்று சட்டம் கொண்டு வந்தால் நாடக காதல் முடிவுக்கு வரும் என்று சொல்லி இருந்தார். அத்துடன் கவுண்டம்பாளையம் படத்தின் மையக்கரு, வாழ்க்கையை தொலைத்த பெண்களின் பக்கத்திலிருந்து தான் எடுக்கப்பட்டதாகவும் இன்றைய காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்களை வைத்து எடுத்ததாகவும், யாரிடம் என்ன பேச வேண்டும் என்ற  பக்குவம் அவசியம் என்பது பற்றியும் தனது கருத்தை தெரிவித்து இருந்தார்.

இந்த பேட்டியை பார்த்த நெட்டிசன்கள், காதல்ல எது சார் நாடக காதல்? காதல் என்றாலே உண்மை தானே என்று ரஞ்சித்தை  கடுமையாக   ட்ரோல் செய்து வருகின்றார்கள்.மேலும் நீங்களும் காதல் திருமணம் தானே செய்திர்கள்?  அப்போ ஏன் பிரிஞ்சிங்க? அப்படி என்றால் நீங்களும் நாடக காதல் தான் செய்தீர்களா என்று ஓபனாக கேட்டு வருகின்றார்கள்.

Advertisement

Advertisement