பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில், கோர்ட்டில் இருந்து கோபிக்கு அழைப்பாணை வந்துள்ளது. இதனால் ஈஸ்வரி பாக்கியாவை திட்டி தீர்க்கிறார். அங்கு எழில் இருந்ததனால் அம்மா ரெஸ்டாரன்ட் பிரச்சினையில் கண்ணீர் விட்டபோது யார் என்ன செய்தீர்கள் என்று கேட்கின்றார். ஆனாலும் ஈஸ்வரி நீ உனது அம்மாவுக்கு தானே சப்போர்ட் பண்ணுவாய் என்று புலம்புகின்றார்.
இதன் போது கோபி யாரும் சண்டை போட வேண்டாம் நான் செய்ததற்கான தண்டனையை நானே அனுபவிக்கின்றேன். பாக்யா மீது எந்த தப்பும் இல்லை என்று சொல்லுகின்றார். அதன் பின்பு இனியாவும் நீ ரொம்ப ஓவரா பண்ணுகிறாய் என்று பாக்யாவுக்கு திட்டி விட்டு செல்கிறார்.
இதை தொடர்ந்து ரூமுக்கு சென்ற கோபி, நான் ஜெயிலுக்கு போய் விட்டால் என்ன செய்வது? மையூவின் படிப்பு இனியாவின் கல்யாணம் என ஒரு பிளான் பண்ணி வச்சிருந்தேன் என்று பேசிக்கொண்டு இருக்க, ராதிகா அப்படி எல்லாம் நடக்காது உங்களுக்காக தமிழ்நாட்டில் நம்பர் ஒன் வக்கீலை ஹையர் பண்ணி இருக்கேன் என்று சொல்லுகின்றார்.
கோபி மேலும் பாக்யாவை பற்றி நல்ல விதமாக பேசிக் கொண்டிருக்க, பாக்கியாவை பற்றி நீங்கள் ஏற்கனவே புரிந்து கொண்டிருந்தால் இப்படி எல்லாம் நடந்திருக்காது தானே என்று ராதிகா கேட்க, இதற்கு என்ன பதில் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை என்று கோபி புலம்புகின்றார்.
அடுத்த நாள் ஈஸ்வரி கோபிக்கு எதுவும் ஆகக்கூடாது என்று சாமி கும்பிடுகின்றார். அந்த நேரத்தில் பாக்யா சமையல் கட்டில் நிற்க, அதற்கு பேசுகின்றார். மேலும் கோபியும் ராதிகாவும் கீழே வர ராதிகா கூட போக வேண்டாம் ராதிகா பாக்கியாவுக்கு நண்பி அதனால் உன்னை இரண்டு பேரும் பிளான் பண்ணி ஜெயிலில் அடைத்து விடுவார்கள் என்று கண்டபடி பேசுகின்றார்.
மேலும் கோபிக்கு எதுவும் நடந்தால் நான் உயிருடனே இருக்க மாட்டேன். கோபி திருந்தி விட்டான் தானே அவனை துரத்தி துரத்தி அடிக்க வேண்டுமா? உன்ட ஆணவம் உன்னை சும்மா விடாது என்று பாக்யாவுக்கு சாபம் விடுகின்றார்.
இறுதியில் பாக்கியாவும் கோபியும் நீதிமன்றத்தின் முன்பு ஆஜராகின்றார்கள். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!