• Dec 26 2024

காதல் தோல்வியால் துவண்ட பாக்யராஜின் மகளுக்கு குழந்தை இருக்கிறதா? உடைந்த உண்மை

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் சிறந்த நடிகராகவும் இயக்குனராகவும் காணப்படுபவர் தான் பாக்கியராஜ். இவர் திரைக்கதை மன்னன் என்று புகழப்படுகின்றார். இவர் இயக்கிய படங்களை இப்போது பார்த்தாலும் ரசிகர்களுடன் கனெக்ட் ஆகும்.  காமெடி, எமோஷன் என பக்காவாக படத்தை உருவாக்கியதால் தான் வெள்ளிவிழா கண்ட இயக்குனர்களுள் ஒருவராக திகழ்ந்து வருகின்றார்.

பாக்கியராஜுக்கு சாந்தனு என்ற மகனும் சரண்யா என்ற மகளும் காணப்படுகின்றார்கள். இவர் பாரிஜாதம் படத்தில் நடித்தவர் தான் சரண்யா. பாக்கியராஜ் இயக்கிய சுவரில்லாத சித்திரங்கள் படத்திற்கு பிறகு ஒரு கை ஒரு ஓசை, மௌன கீதங்கள், விடியும் வரை காத்திரு, தூறல் நின்னு போச்சு, இன்று போய் நாளை வா, அந்த ஏழை நாட்கள், முந்தானை முடிச்சு, ராசுக்குட்டி, சுந்தரகாண்டம், தாவணி கனவுகள் என அவர் இயக்கிய அத்தனை படங்களுமே ஹிட் அடித்தன.

பாக்கியராஜின் தனிப்பட்ட வாழ்க்கையில் அவருடைய முதல் மனைவி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அதன் பின்பு நடிகை பூரணிமாவை காதலித்து திருமணம் செய்தார். பாக்கியராஜின் மகன் சாந்தனு சினிமாவில் அடையாளப்பட்ட நடிகர்களுள் ஒருவராக காணப்படுகின்றார். சரண்யா பாரிஜாதம் படத்தில் மட்டும் தான் நடித்தார்.

சரண்யாவுக்கு 38 வயதாகியும் திருமணம் நடக்கவில்லை. அதற்கு காரணம் அவருடைய காதல் தோல்வி தான் என்று கூறப்பட்டது. அது மட்டுமின்றி காதல் தோல்வியால் மூன்று முறை விபரீத முயற்சியும் எடுத்துள்ளாராம்.


இந்த நிலையில், அவர் கொடுத்த பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் நானும் சாந்தனுவும் ஒருவருக்கொருவர் அன்பையும் பாசத்தையும் வைத்திருக்கின்றோம். அதை எப்போதும் நாங்கள் வெளிக்காட்டியது இல்லை. சாந்தனு நடித்த ப்ளூ ஸ்டார் படம் எனக்கு பிடித்திருந்தது. 

நான் குழந்தையையும் பார்த்துக் கொண்டு செய்யும் காஸ்டியூம் டிசைன் வேலையும் பார்ப்பது ரொம்பவே கஷ்டமாக உள்ளது. என்னுடைய அம்மா எப்படி சிரமப்பட்டு இருப்பார் என்பதை இப்போதுதான் புரிகின்றது. என்னுடைய குடும்பம் எனக்கு எல்லா வகையிலும் சப்போர்ட்டாக உள்ளது. இதனால் புதிய தாயாக நான் இருந்தாலும் தூங்கும் நேரம் எனக்கான ஸ்பெஷல் ஆகியவை கிடைக்கின்றது என்று கூறியுள்ளார்.


Advertisement

Advertisement