பா. ரஞ்சித் தயாரிப்பில் குரு சோமசுந்தரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பாட்டில் ராதா. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் வெற்றிமாறன், பா. ரஞ்சித், மிஷ்கின் ஆகியோர் கலந்து கொண்டுள்ளார்கள்.
இந்த நிலையில், பாட்டில் ராதா இசை வெளியீட்டு விழாவில் பேசிய வெற்றிமாறன், எனக்கு ஆல்கஹால் அடிக்சன் இல்லை.. ஆனால் நிக்கோட்டின் அடிக்சன் இருந்தது என தெரிவித்து உள்ளார். தற்போது அவருடைய பேட்டி வைரலாகி வருகின்றது.
அதன்படி அவர் கூறுகையில், தெருவில் ஒருவர் குடிக்காமல் இருந்தாலே பெரிய விஷயம். ஏனென்றால் ஒரு தெருவில் 10 குடி நோயாளிகளாக உள்ளார்கள்.
நானும் நிக்கோட்டின் அடிக்சன் இருந்தேன். எல்லாருமே டிஜிட்டல் அடிக்ஷனில் தற்போது உள்ளார். எல்லா காலத்திலும் அடிக்ஷன் நம் சமூகத்தில் உள்ளது. அது இல்லாத காலமே கிடையாது.
தற்போது உள்ள காலகட்டத்தில் உள்ள அடிக்சன் குடிநோய் முப்பது வருடங்களுக்கு முன்பு ஒரு தெருவில் ஐந்து பேர் இருந்தால் அதில் ஒருவரை குடி நோயாளியாக காணப்படுவார்.
ஆனால் இப்போது தெருவில் ஒருவர் குடிக்காமல் இருந்தாலே பெரிய விஷயமாக காணப்படுகின்றது. ஏனென்றால் ஒரு தெருவில் பத்து குடிநோயாளிகளாக இருக்கின்றார்கள். குடிக்கிறவங்களுக்கும் குடி நோயாளிகளுக்கும் உள்ள வித்தியாசத்தை நான் இந்த படத்தில் பார்த்தேன் என பேசியுள்ளார்.
Listen News!