சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அதில் விஜய் டிவி, சன் டிவிக்கு அடுத்தபடியாக ஜீ தமிழ் தொலைக்காட்சி காணப்படுகிறது.
இந்த நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நெஞ்சத்தைக் கொள்ளாதே சீரியல் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட போதும் தற்போது மிக விரைவிலேயே நிறைவுக்கு வந்துள்ளது. இதில் ஜெய் ஆகாஷ் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ரேஷ்மா முரளிதரன் நடித்துள்ளார்.
d_i_a
தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி படங்களில் நாயகனாக நடித்தவர் தான் ஜெய் ஆகாஷ். இவர் கடந்த சில ஆண்டுகளாகவே சின்னத்திரையில் முக்கியமான கேரக்டர்களில் நடித்து வருகின்றார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான நீ தானே என் பொன்வசந்தம் என்ற தொடரில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். அதேபோன்று பூவே பூச்சூடவா, கிழக்கு வாசல், அபி டெய்லர் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரேஷ்மா.
இவர்கள் இருவருக்குமே சின்னத் திரையில் ஏராளமான ரசிகர்கள் காணப்படுவதால் நெஞ்சத்தை கொள்ளாதே சீரியலும் ஆரம்பம் முதல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வந்தது. ஆனால் இந்த சீரியலின் டிஆர்பி திடீரென சரிந்ததால் இதனை படக்குழுவினர் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்கள்.
நெஞ்சத்தைக் கொள்ளாதே சீரியல் ஆரம்பிக்கப்பட்டு வெறும் ஆறு மாதங்களே ஆன நிலையில் இந்த தொடர் நிறைவுக்கு வந்துள்ளமை ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே ரேஷ்மா நடிப்பில் வெளியான கிழக்கு வாசல் சீரியலும் குறுகிய காலத்திற்குள் நிறைவடைந்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!