'களவாணி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஓவியா. இவர் நடித்த முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து கலகலப்பு, மூடர் கூட்டம், மெரினா, மத யானை கூட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
நடிகை ஓவியா படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானதை விட பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேர்மையாக விளையாடி ஒட்டுமொத்த ரசிகர்களின் மனங்களையும் கவர்ந்தார். சமீபத்தில் ஓவியாவின் ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆனது. ஆனால் அதற்கு யாரும் எதிர்பார்க்காத விதத்தில் பதிலடி கொடுத்திருந்தார்.
d_i_a
ஒரு சிலர் ஓவியாவின் பதிலை பாராட்டினாலும் இதெல்லாம் ஒரு பதிலா என இன்னும் சிலர் அவரை கடுமையாக விமர்சித்தும் இருந்தார்கள். மேலும் குறித்த வீடியோ தொடர்பில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து இருந்தார் ஓவியா.
சமீபத்தில் ஓவியா வழங்கிய பேட்டியில், தனது திருமண தொடர்பிலும் பதில் அளித்திருந்தார். அதில் திருமணம் என்பது எனது வாழ்க்கையில் தேவைப்படாத ஒன்று. திருமணத்திற்கு நான் தயாராகவும் இல்லை. இனிமேலும் தயாராக மாட்டேன். யாருடனும் என்னால் ஒற்றுமையாக வாழ முடியாது என்று அதிரடியாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நடிகை ஓவியா தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் படம் ஒன்றிற்கு ஷூட்டிங் நடப்பது போல சுற்றி வளைத்து ஆண்கள் நிற்க, அவர்களை அடித்து துவம்சம் பண்ணுவது போல ஆக்சன் போட்டு உள்ளார்.
தற்பொழுது ஓவியாவின் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அடுத்த விஜய சாந்தி நீங்க தான் என கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.
Listen News!