இட்லிக்கடை,நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் போன்ற திரைப்படங்களில் மிகவும் பிசியாக நடித்துவருகின்றார்.குறித்த இரு திரைப்படங்களினதும் அப்டேட்டுகள் தினமும் வெளியாகி வரும் நிலையில் தற்போது தனுஷ் அவர்கள் திடீர் சுகயீனம் காரணமாக படப்புடிப்புகளை ஒத்தி வைத்துள்ளது.
மற்றும் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் போதே அவருக்கு சுகமில்லாமல் போயுள்ளதுடன் படக்குழு பேக் அப் செய்துள்ளது.அது மட்டுமல்லாமல் பிளான் பண்ணியது போல் சண்டை காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகள் முதுகலத்தூர் மற்றும் தாய்வானில் படமாக்க தீர்மானித்திருந்ததாகவும் தற்போது தனுஷிற்கு உடல் நிலை சரியில்லமை காரணமாக குறித்த படப்பிடிப்புகளினை இட்லிக்கடை படக்குழு ஒத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது உடல் நிலை சரியாகியதும் மீண்டும் முதுகளத்தூரில் சண்டை காட்சிகள் படப்பிடிக்கப்பட்டு வெளிநாடு செல்லவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
Listen News!