• Dec 27 2024

27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் 'மின்சார கனவு'.. அதகள அப்டேட்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தெலுங்கு இயக்குனரான சரண் தேஜ் உப்பலபதி பாலிவுட்டில் புதிய திரைப்படம் ஒன்று இயக்குகின்றார். அதிரடி திரில்லர்  திரைப்படமாக உருவாகும் இந்த படத்தில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பிரபு தேவாவும் நடிகை கஜோலும் இணைந்து  உள்ளார்கள்.

இந்த படத்தில் பிரபு தேவா, கஜோலை தவிர நஸ்ருதீன் ஷா, சம்யுக்தா மேனன், ஆதித்யா ஷீல் மற்றும் ஜிஷு செங்குப்தா ஆகியோரம் நடிக்கின்றார்கள். இதற்கு ஹர்ஷவர்தன் ராமேஷ்வர்  இசையமைப்பாளராக பணியாற்றுகின்றார்.


இந்த படத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில், இந்த படத்தின் டீசரை விரைவில் வெளியிட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு பிரபுதேவாவும் கஜோலும் ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான மின்சார கனவு படத்தில் நடித்து இருந்தார்கள்.

இந்த படம் இந்தியில் சப்னா என்ற பெயரில் வெளியானது. தற்போது மீண்டும் 27 ஆண்டுகளுக்குப் பிறகு  இணையும் இவர்களது கெமிஸ்ட்ரியை பார்க்க ரசிகர்கள் ஆவலாய் உள்ளார்கள்.

Advertisement

Advertisement