• Dec 25 2024

End of the game -ல நீ எதுக்கு அடக்கி வாசிக்கிற? அர்ச்சனாவை பொறாமையில் வெளுத்துவாங்கிய விசித்ரா

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில், விசித்திரா அர்ச்சனாவை கடுமையாக விமர்சித்து இருக்கிறார். தனக்கு ஆதரவாக தினேஷிடம் சண்டைக்கு போகாத காரணம் என்ன என்று கேட்க இருவருக்கும் வாக்குவாதம் ஆகி இருக்கிறது.


அதன்படி, ஆரம்பத்தில் ஒரு மாதிரி இருந்த, பிறகு திடீரென நெகட்டிவ்வா மாறிட்ட என அர்ச்சனாவை பார்த்து விசித்ரா திட்டுகிறார்.

இதற்கு அர்ச்சனா, நீங்க சொல்லுறது வெரி டிசப்பாயின்டட். அன்டைக்கு அத அக்சப்ட் பண்ணிக்கிட்டிங்க.. இப்ப வந்து நடிப்பு என்று சொல்லுறீங்க அப்படி என விசித்திராவை பார்த்து சொல்லுகிறார்.


இதையடுத்து, நீ இப்போ எண்டு ஒப் த கேம்ல அமைதியா இருக்கிறது எனக்கு சந்தேகமா இருக்கு என விசித்ரா சொல்ல, அது எனக்கு அப்படி தான் தோணுது என அர்ச்சனாவும் கத்துகிறார்.


இவ்வாறு ஆரம்பத்தில் அம்மா, மகள் போல இருவரும் ஒன்றிணைந்து காணப்பட்டனர். எனினும் தற்போது இருவரும் முட்டி மோதி உள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement