• Dec 26 2024

’சிறகடிக்க ஆசை’ விஜயா போலவே டான்ஸ் ஸ்கூல் ஆரம்பித்த ‘எதிர்நீச்சல்’ நடிகை.. அதே ஃபீஸ் தான்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

'சிறகடிக்க ஆசை’ சீரியலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஒளிபரப்பான எபிசோடில் விஜயா டான்ஸ் ஸ்கூல் ஆரம்பித்தார் என்பதும் ஆனால் அவரது டான்ஸ் ஸ்கூலுக்கு ஒரு ஸ்டூடண்ட் கூட வரவில்லை என்பதால் கடுப்பானார் போன்ற காட்சிகள் காமெடியாக இருந்தது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் நடித்த ஹரிப்பிரியா உண்மையாகவே டான்ஸ் ஸ்கூல் ஆரம்பித்து உள்ள நிலையில் அவருக்கு ‘எதிர்நீச்சல்’ சீரியலில் நடித்த நட்சத்திரங்கள் உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



சன் டிவியில் ஒளிபரப்பான ‘எதிர்நீச்சல்’ சீரியலில் நந்தினி என்ற கேரக்டரில் நடித்த ஹரிப்பிரியா, சென்னை கோடம்பாக்கம் மற்றும் போரூர் ஆகிய இரண்டு இடங்களில் இசை மற்றும் நடன பள்ளி ஆரம்பித்துள்ளதாகவும் ஒரு மாணவிக்கு ரூபாய் 2000 என்றும் பீஸ் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விஜயாவும் ஒரு மாணவிக்கு ரூ.2000 வாங்க போவதாக ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘எதிர்நீச்சல்’ சீரியல் முடிந்ததும் டான்ஸ் ஸ்கூல் ஆரம்பித்துள்ள ஹரிப்பிரியாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் நீங்கள் இந்த தொழிலில் மென்மேலும் உயர இறைவனை பிரார்த்திக்கிறோம் என்றும் கூறி வருகின்றனர்.


Advertisement

Advertisement