• Dec 26 2024

தமிழுக்கு நேர்மாறான கிளைமாக்ஸ்.. ’எதிர்நீச்சல்’ தெலுங்கு முடிவுக்கு குவியும் ஆதரவு..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பான ’எதிர்நீச்சல்’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென அந்த சீரியல் முடிவுக்கு வந்தது, அந்த சீரியலை தொடர்ந்து பார்த்து கொண்டிருந்த ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

\இந்த நிலையில் தமிழைப் போலவே தெலுங்கிலும் இந்த வாரம் ’எதிர்நீச்சல்’ சீரியல் முடிவுக்கு வந்துள்ள நிலையில் தமிழிலிருந்து நேர்மாறான கிளைமாக்ஸ் தெலுங்கில் இருப்பதை பார்த்து தெலுங்கு ஆடியன்ஸ்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

சன் டிவியில் ஒளிபரப்பாகிய ’எதிர்நீச்சல்’ சீரியல் 700 எபிசோடுகளுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென கிளைமாக்ஸ் காட்சிகளுடன் முடிவடைந்தது. இந்த சீரியலின் கிளைமாக்ஸில் குணசேகரனை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு தன் வீட்டு பெண்களுக்கு அப்பத்தா அறிவுரை கூறுவது மாதிரி முடிக்கப்பட்டு இருக்கும்.



இதேபோன்று பல குணசேகரன்களை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அப்போதெல்லாம் மனம் தளராமல் வெற்றி நடை போட வேண்டும் என்றும் உங்களுடைய வெற்றி தான் உங்களது எதிரிகளுக்கு பதிலடியாக இருக்க வேண்டும் என்றும் அப்பத்தா கூறுவதுடன் ’எதிர்நீச்சல்’ சீரியல் முடிவடைந்திருக்கும்.

ஆனால் ’எதிர்நீச்சல்’ தெலுங்கு சீரியலில் குணசேகரன் மற்றும் அவரது சகோதரர்கள் அனைவரும் மனம் திருந்தி தங்கள் மனைவிமார்களுக்கு ஆதரவு கொடுப்பது போன்றும், மனைவிமார்கள் வேலைக்கு செல்லும் போது டாட்டா காட்டி அவர்களை அன்புடன் வழியனுப்பி வைப்பது போன்று முடிக்கப்பட்டுள்ளது.

தமிழை விட பாசிட்டிவாக தெலுங்கில் இந்த சீரியல் முடிவடைந்ததை அடுத்து தெலுங்கு சீரியல் ரசிகர்கள் இந்த முடிவுக்கு பெரும் வரவேற்பை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement