பிக்பாஸ் சீசன் எட்டு இறுதி அத்தியாயத்தை நெருங்கிக் கொண்டுள்ளது. இதில் பத்து போட்டியாளர்களே எஞ்சியுள்ள நிலையில், இவர்களுக்கு இடையே கடுமையான போட்டியும் நிலவி வருகின்றது.
இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 8ல் இருந்து எலிமினேட் ஆகி வெளியே வரும் போட்டியாளர்களை சபரி கலகலப்பாக பேட்டி எடுத்து வருகின்றார். அதிலும் இறுதியாக சத்யா, தர்ஷிகா ஆகியோரை வைத்து செய்திருந்தார்.
இந்த நிலையில், பிக்பாஸ் பன்அன்லிமிட்டட் சார்பில் ரவீந்தர் பங்கேற்றுள்ளார். இதன்போது அவர் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் பற்றி பேசிய விடயம் வைரலாகி வருகின்றது.
அதன்படி பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களின் புகைப்படத்தை காட்டிய சபரி, இவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று ரவீந்தரிடம் கருத்து கேட்கிறார்.
அதன்படி முதலாவதாக அருணின் புகைப்படத்தை காட்டிய போது, பங்காளி பற்றி எப்படி பேசுவது என்று தெரியவில்லை.. பொதுவா ஒரு பிளேயருக்கு வெளியில நிறைய பேன்ஸ் இருப்பாங்க.. ஆனால் அருணுக்கு ஒன்று என்றால் கேள்வி கேட்க வெளியில் வின்னரே இருக்காங்க..
சும்மா இருந்த அருணை உள்ளே போன வைல்ட் கார்ட் சொறிஞ்சு விட்டாங்க...இவர் சாதாரண பிளேயர் இல்ல... ஆனாலும் பிக் பாஸ் வீட்டுக்கு உள்ள பாரபட்சம் இல்லாம ஒரு கேரக்டரை சொல்லணும் என்றால் அருணை சொல்லலாம்.. மேலும் அடுத்த வாரம் ஒன்னு கிடைக்கும் அதை எடுத்துவிட்டு அருண் கிளம்பிடனும் என ரவீந்தர் தெரிவித்து உள்ளார்.
இதை தொடர்ந்து சௌந்தர்யா பற்றி கேட்க, ஏதாவது ஒரு பிரச்சினை என்றா டிவி டிமோட்ட Mute_ல போட்டாலும் இந்த பொண்ணு சத்தம் தான் கேக்குது. அவ்வளவு சவுண்டா இருக்கு. ஒரு பாயிண்டுக்கு சவுண்டு இந்த வீட்டுல ஒரு நோய்ஸா இருந்தாங்களே தவிர வாதத்தை வைக்க கூடிய ஒரு பிளேயரா இல்லை என தெரிவித்துள்ளார்.
Listen News!