• Apr 13 2025

குழந்தை பெத்துக்கிட்டாலும் இவங்க ரொமான்ஸ் குறையலையே.!! அமலாபாலின் க்யூட் போட்டோஸ்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

வீரசேகரன் என்ற படத்தில் அறிமுகமான அமலா பாலை, சர்ச்சை நாயகியாக எடுத்துக்காட்டிய திரைப்படம் தான் சிந்து சமவெளி. அதன் பின்பு பிரபு சாலமன் இயக்கத்தில் அமலாபால் நடித்த மைனா திரைப்படம் இவருடைய திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக காணப்பட்டது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் மட்டும் இல்லாமல் இந்தி, மலையாளம், தெலுங்கு என பிற மொழிகளிலும் நடிக்க தொடங்கினார். திரை உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்த அமலாபால், தலைவா படத்தில் நடிக்கும் போது அந்தப் படத்தின் இயக்குனர் ஏ. எல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் திருமணம் ஆன நான்கு வருடங்களிலேயே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.

சீனு ராமசாமி எப்போதும் அங்க தான் இருப்பார்..! விவாகரத்துக்கு முக்கிய காரணம் வெளியானது!

இதைத் தொடர்ந்து அமலா பாலின் நீண்ட நாள் நண்பரான ஜெகத் தேசாய் என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது. அமலா பால் தனது குழந்தைக்கு இலை என பெயர் வைத்தார்.


இந்த நிலையில், சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக காணப்படும் அமலா பால் தனது இன்ஸ்டா  பக்கத்தில் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் அமலாபாலுக்கு குழந்தை பிறந்த பிறகும் அவர் கணவர் மீது கொண்டுள்ள ரொமான்ஸ் மட்டும் குறையவில்லை என்று கமெண்ட் பண்ணி வருகின்றார்கள். தற்போது குறித்த புகைப்படங்கள் இணையதள பக்கங்களை கவர்ந்து வருகின்றன.

Advertisement

Advertisement