• Jan 15 2025

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல நடிகர் ! மேலும் 9 பேர் கைது அதிர்ச்சியில் சினிமாத்துறை!

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

முன்னணி பிரபலமாக இருக்கும் நடிகர்கள் கைது செய்யப்படுவதென்பது குறித்த சினிமா துறைக்கே பெரியளவு அதிர்ச்சியாக அமைகின்றது. அவ்வாறே சமீபத்திழும்  கன்னட சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் தர்சன் கைது செய்யப்பட்டுள்ளார்.


 தர்சன் கன்னடத் திரைப்பட நடிகறும்  வனவிலங்கு ஆர்வலறும் ஆவார்.  இவரது தந்தை தூகுதீப சீனிவாஸ் திரைப்பட நடிகர் என்பதால்  2001இல் நடிக்கத் தொடங்கிய தர்ஷன், ஏறத்தாழ 60 திரைப்படங்களில் நடித்துள்ளார்.மெஜஸ்டிக் என்ற திரைப்படத்தின் மூலம் பரவலாக அறியப்பட்டார்.


இந்த நிலையிலேயே இவர்  கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். சித்ரதுர்காவைச் சேர்ந்த ரேணுகா சுவாமி கொலை வழக்கில் தர்ஷனுக்கு தொடர்பு இருப்பதாக கூறி, மைசூரில் உள்ள அவரது பண்ணை வீட்டில் இருந்த போது பெங்களூர் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இதே வழக்கில் மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது


Advertisement

Advertisement