• Apr 28 2026

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் 'டெக்ஸ்லா' படத்தில் இணையும் பாலிவுட் பிரபலம்.. யார் தெரியுமா?

shali / 1 hour ago

Advertisement

Listen News!

‘லால் சலாம்’ படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘டெக்ஸ்லா’ தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ரஜினிகாந்த் அவர்களின் மகளான ஐஸ்வர்யா, இந்த படத்தை ஆரம்பத்தில் குழந்தைகள் மையப்படுத்திய சிறிய பட்ஜெட்டில் உருவாக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் பின்னர் கதையில் செய்யப்பட்ட மாற்றங்களும், நட்சத்திரங்களின் இணைப்பும் காரணமாக படம் பெரிய அளவுக்கு வளர்ந்துள்ளது.


இந்த படத்தை கண்ணன் ரவி தயாரிக்க, இசையை யுவன் சங்கர் ராஜா அமைக்கிறார். நடிகர்கள் ஜெய், சுராஜ் வெஞ்சராமுடு, ஆனந்த்ராஜ், ஜி.எம். சுந்தர் மற்றும் ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும், இந்த படத்தில் ஒரு முக்கிய கேமியோ கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது படம் மீது கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

பல்வேறு மொழிகளில் ரசிகர்களை கவரும் வகையில் உருவாகும் இந்த ‘டெக்ஸ்லா’ திரைப்படம், ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் ஒரு புதிய முயற்சியாக பார்க்கப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்த மேலும் அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement