• Dec 25 2024

என்னையும் அட்ஜஸ்ட்மென்ட்க்கு கூப்பிட்டாங்க.. அதுல ஒருத்தர பிடிச்சது.! சகிலா ஓபன் டாக்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பலராலும் அறியப்பட்ட நடிகை தான் ஷகீலா. இவர் மிகவும் தைரியமான பெண்ணாகவும் குரல் எழுப்ப தயங்கும் இடங்களிலேயே கேள்விகளை முன்வைத்து அரங்கே அதிரவைக்கும் டேலெண்டும் கொண்ட நடிகையாக காணப்படுகிறார். சிறுவயதில் இருந்து சினிமாவில் நடித்து வரும் இவர், தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றார்.

மலையாள திரை உலகில் ஒரு காலத்தில் கவர்ச்சியாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். இவரது படங்கள் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக காணப்படும் மம்முட்டி, மோகன்லால் படங்களை விட அதிக வசூல் செய்துள்ளது. அதேபோல தமிழ் சினிமாவிலும் இவர் கவர்ச்சி காட்ட  தயங்கவில்லை.

ஆனாலும் இவர் அளித்த பேட்டி ஒன்றில், தான் இந்த நிலைமைக்கு உள்ளானதற்கு காரணமே தனது தாயார் தான் என பகிரங்கமாகவே கூறியிருந்தார். தன்னை 12 வயதிலேயே கட்டாயப்படுத்தி கவர்ச்சி காட்சியில் நடிக்க வைத்ததாகவும் தனது கவலையை தெரிவித்து இருந்தார்.



இந்த நிலையில், தற்போது அவர் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது. அதாவது என்னையும் நிறைய இயக்குனர்கள் அட்ஜஸ்ட்மென்ட்க்கு கூப்பிட்டாங்க. நான் இப்போ அதை பெருசு பண்ணி என்னையும் கூப்பிட்டாங்கன்னு காட்டிக்க மாட்டேன். ஆனால் கூப்பிட்டவர்களில் எனக்கு ஒருத்தரை பிடித்து இருக்கும். அவரை நான் ஓகே பண்ணிடுவேன் அதற்குப் பெயர் அட்ஜஸ்மென்ட் கிடையாது என ஷகிலா கூறியுள்ளார்.

தற்போது மலையாள சினிமாவில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை பல சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், ஷகிலாவும் தனது கேரியரில் இடம் பெற்ற சம்பவம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement