• Dec 26 2024

கோட் படத்திற்கு இலவச டிக்கெட் கொடுக்கும் பிரபல ஹோட்டல்! ஆனா ஒரு கண்டிஷன்?

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

சமூக வலைதள பக்கங்களில் தற்போது இளையதளபதி நடிப்பில் வெளியாக உள்ள கோட் திரைப்படம் பற்றிய தகவல்கள் தான் பேசு பொருளாக காணப்படுகின்றது. கோட் திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் இந்த படத்திற்கான ப்ரமோஷன் தாறுமாறாக இடம் பெற்று வருகின்றது.

சர்வதேச அளவில் சுமார் 5000 திரையரங்குகளில் ரிலீசாக உள்ள கோட் படம் படத்தை கொண்டாடுவதற்கு விஜயின் ரசிகர்கள் தயாராகி வருகின்றார்கள். இந்த படம் அதிகமான வசூலை குவிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தும் இல்லை.

நடிகர் விஜய்க்கு சிறப்பான மார்க்கெட் காணப்படுகின்றது. இதனால் அவருடைய சம்பளம் 200 கோடிகளை தாண்டியுள்ளது. கோட் படத்திற்கும் அவர் 200 கோடி சம்பளம் வாங்கியதாகவே கூறப்படுகிறது. இது அந்தப் படத்தின் பட்ஜெட்டில் பாதி என்றும் கூறப்பட்டுள்ளது .அத்துடன் இதைவிட அதிகமாக சம்பளம் கொடுத்தும் விஜய் ஹையர் பண்ணுவதற்கு தயாரிப்பாளர்கள் ஆர்வமாக உள்ளார்கள்.

கோட் படத்தில் விஜய் அப்பா, மகன் என இரண்டு கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் இணைந்துள்ளார்கள். இந்த படத்தில் இருந்து இதுவரை நான்கு பாடல்கள் வெளியாகி உள்ளது.


இந்த நிலையில், மதுரை வில்லாபுரத்தில் இயங்கிவரும் கோச்சடை பசியாறு என்ற அசைவ ஹோட்டலில் 2999 ரூபாய்க்கு மேல் சாப்பிடும் வாடிக்கையாளர்களுக்கு கோட் படத்தின் முதல் நாள் ஷோவிற்கான இரண்டு டிக்கட்டுகள் வழங்கப்படும் என்று ஹோட்டல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனால் குறித்த இடத்தில் மிகப் பெரிய பரபரப்பை கோட் திரைப்படம் உருவாக்கியுள்ளது. படத்தை பார்ப்பதற்கான இலவச டிக்கட்டுக்களுக்காக ரசிகர்கள் அங்கு அலைமோதி வருவதையும் பார்க்க முடிகின்றது. இந்த அறிவிப்பு தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement