• Apr 14 2025

இசையில் AI தொழிநுட்பத்தைப் பயன்படுத்த வேண்டாம்...! – பிரபல பாடகர் அதிரடிக் கருத்து!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஹாரிஸ் ஜெயராஜ், சமீபத்தில் அளித்த பேட்டியில் AI தொழிநுட்பம் இசை உலகில் பயன்படுத்தப்படக்கூடாது என்ற தன்னுடைய கருத்தைப் பகிர்ந்துள்ளார்.

இப்போது டிஜிட்டல் புரட்சியால் AI தொழிநுட்பம் பல துறைகளிலும் அதிகரித்து வருகின்றது. எனினும், இந்த AI  தொழிநுட்பம் இசைத் துறையில் வருவதன் மூலம் பழைய பாடகர்களின் குரல்களை அவமதிப்பது போல இருப்பதாக ஹாரிஸ் ஜெயராஜ் கூறியுள்ளார்.


ஹாரிஸ் ஜெயராஜ் தனது பேட்டியில் "மறைந்த பாடகர்களை AI மூலம் பாட வைக்கலாம் என்ற எண்ணம் அவர்களை அவமதிப்பதற்குத் துணை புரிகிறது" எனத் தெரிவித்துள்ளார். அத்துடன், "இந்த தொழிநுட்பத்தை நம்பி பாடல்களை உருவாக்குவது, அந்த பாடல்களை பாடும் உண்மையான பாடகர்களுக்கும் அவமதிப்பு ஏற்படுத்தும்" என்றும் கூறியுள்ளார். அதனால், அவர் "தனது இசையில் AI தொழிநுட்பம் பயன்படுத்த மாட்டேன்" என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

AI தொழிநுட்பம் தற்போது பல துறைகளில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, பழைய பாடல்களை மீண்டும் உருவாக்குதல், மறைந்த பாடகர்களின் குரலை வைத்து பாடல் உருவாக்குதல், ஒலி மாற்றம் போன்ற தொழில்நுட்பங்கள் அதிகம் வளர்ந்துள்ளன. இவை சிலருக்கு புதிய அனுபவமாக இருந்தாலும் பாடகர்களின் உண்மையான இசை உணர்வுகளை இழக்கக்கூடிய ஆபத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதன் மூலம் ஹாரிஸ் ஜெயராஜ், AI தொழிநுட்பத்தால் இசையின் உண்மைத் தன்மையை இழக்க வேண்டாம் என்பதில் உறுதியாக உள்ளார் என அறியமுடிகிறது. அவரது இந்த முடிவிற்கு இசைத்துறையில் இருக்கும் பலரும் ஆதரவு வழங்கி வருகின்றனர்.

Advertisement

Advertisement