• Dec 27 2024

நம்ப வைத்து கழுத்தறுத்த கமல்-பிரபாஸ்..’கல்கி 2898 ஏடி’ படக்குழுவால் செம கடுப்பில் ரசிகர்கள்..

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

பிரபாஸ் கதாநாயகனாகவும், கமல்ஹாசன் வில்லனாகவும் வேறு முக்கிய வேடத்தில் அமிதாபச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள திரைப்படம் ’கல்கி 2898 ஏடி’.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஜூலை 27ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் நேற்று மாலை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன் பின்னர் திடீரென இரவு 8 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

ரூபாய் 500 கோடி பட்ஜெட் படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இந்த பாடலை கேட்க ரசிகர்கள் ஆர்வமாக இருந்த நிலையில் திடீரென நேரம் தள்ளிப்போனதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் 8 மணி ஆகியும் பைரவா ஆந்தம் என்ற அந்த பாடல் வெளியாகவில்லை என்பதால் ரசிகர்கள் செம கடுப்பாகி இருந்தனர்..

அதன் பின்னர் திடீரென மறுநாள் தான் பைரவா ஆந்தம் பாடல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதால் கமல் மற்றும் பிரபாஸ் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். ஒரு பாடலை கூட குறிப்பிட்ட நேரத்தில் திட்டமிட்டு வெளியிட முடியவில்லையா? ரூ.500 பட்ஜெட்டில் படம் எடுக்கும் படக்குழுவினர் ஒரு சின்ன விஷயத்தை கூட சரியாக திட்டமிட முடியவில்லையா? என்று ரசிகர்கள் கடும் விமர்சனம் செய்தனர்.

குறிப்பாக தெலுங்கு ரசிகர்கள் பிரபாஸை அந்த பாடலில் பார்க்க ஆர்வத்துடன் இருந்த நிலையில் அவர்கள் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ஒரு வழியாக ரசிகர்களை ஏமாற்ற கூடாது என்பதற்காக ஆடியோ வடிவில் மட்டும் பைரவா ஆந்தம் பாடல் நேற்று இரவு வெளியாகியுள்ளது.

ஆனால் அதே நேரம் லேட்டாக வந்தாலும் பைரவா ஆந்தம் பாடல் சூப்பராக இருக்கிறது என்றும் சந்தோஷ் நாராயணன் கம்போசிங் தரமாக இருக்கிறது என்றும் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement