• May 20 2026

பாக்ஸ் ஆபிஸில் ‘கருப்பு’ மாஸ்… ஆனால் ‘வாடிவாசல்’ கனவு இன்னும் கனவாகவே இருக்கிறதே.!

shali / 2 hours ago

Advertisement

Listen News!

சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் தற்போது பெரிய அளவில் வெற்றி பெற்று, பாக்ஸ் ஆபிஸில் மெகா ஹிட்டாகியுள்ளது. உலகளவில் இதுவரை சுமார் 160 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இன்னும் சில நாட்களில் 200 கோடி கிளப்பில் சேரும் வாய்ப்பும் அதிகமாக உள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யாவுக்கு கிடைத்த இந்த கமர்ஷியல் வெற்றி அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அதே நேரத்தில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவிருந்த ‘வாடிவாசல்’ படம் தாமதமாகி நிறுத்தப்பட்டிருப்பது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இருந்த இந்தப் படம், இந்திய சினிமாவிலேயே முக்கியமான படமாக அமையும் என கணிக்கப்பட்டது. ஆனால் அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது, எனினும்  ‘கருப்பு’ வெளியாகி வெற்றியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இயக்குநர் மிஷ்கின் அளித்த பேட்டியிலும் ‘வாடிவாசல்’ கதையின் பிரமாண்டத்தை அவர் பாராட்டியிருந்தார். அந்தக் கதை திரையில் வந்திருந்தால் சூர்யாவுக்கு அது ஒரு ஆல் டைம் ஹிட் ஆக இருந்திருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அதே சமயம் ‘கருப்பு’ வெற்றி குறித்து மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளார்.

மொத்தத்தில், ஒரு பக்கம் ‘கருப்பு’ படம் சூர்யாவுக்கு புதிய உச்சத்தை கொடுத்தாலும், மறுபக்கம் ‘வாடிவாசல்’ பற்றிய எதிர்பார்ப்பு இன்னும் ரசிகர்களின் மனதில் பெரிய ஏக்கமாகவே நீடிக்கிறது.

Advertisement

Advertisement