• Mar 01 2025

'ஜனநாயகன்' படத்திற்கு விஜய் வைத்த டிமாண்ட்..? ஷாக்கில் ரசிகர்கள்

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தென்னிந்தியாவின் தமிழ் நடிகராக திகழ்பவரே நடிகர் விஜய். இவர் ஏறத்தாழ 10 படங்களின் பின்னரே மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருந்தார். எனினும் இப்பொழுது திரைப்பட துறையின் முதன்மை நடிகர்களுள் ஒருவராக விளங்குகின்றார். ரசிகர்கள் இவரை "தளபதி " என்று அழைத்து வருகின்றார்கள்.

நடிகர் விஜய் நாளைய தீர்ப்பு என்ற படத்துடன் அறிமுகமாகி லியோ , மாஸ்டர் , பிகில் மற்றும் சர்கார் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது தனது இறுதி படமான "ஜனநாயகன்" படத்தில் நடித்து வருகின்றார். 


அதில் ஜனநாயகன் திரைப்படம் தொடங்குவதற்கு முன்பு விஜய் இயக்குநரிடம் ஒரு டிமாண்ட் ஒன்றினை வைத்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் விஜய் தனது படத்தை அனைத்து வயதினரும், அனைத்து அரசியல் கட்சிகளும் பார்க்க கூடிய வகையில் அமைய வேண்டும் என்றார்.

அத்துடன் இப்படத்தில் யாரையும் தாக்கும் வகையில் இல்லாமல் லைட்டானா விஷயங்கள் மட்டும் வைத்து காணப்பட வேண்டும் என்று இயக்குநர் வினோத்திடம் கோரிக்கை விடுத்துள்ளாராம். தற்போது இந்த தகவல் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement