• Jun 21 2025

41வது பிறந்த நாள் கொண்டாடும் இயக்குநர் நெல்சன்..!வாழ்த்துக்கள் தெரிவிக்கும் ரசிகர்கள்..!

Roshika / 5 hours ago

Advertisement

Listen News!

திரைத்துறையின்  முன்னணி இயக்குநராக  வலம் வருபவர் நெல்சன் திலீப்குமார்.இவர் நயன்தாரா நடித்த "கோலமாவு கோகிலா" படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இன்று தனது 41வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். இந்நிலையில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இவர் " கோலமாவு கோகிலா" படத்தின் வெற்றியை தொடர்ந்து டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் என தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வர ஆரம்பித்து விட்டார்.


இந்த நிலையில் "பீஸ்ட்" திரைப்படம் பல  விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியில்  நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. தற்போது இவர் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படம் தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் படமானது. இதை தொடர்ந்து ஜெயிலர் 2 படத்தை இயக்கி வருகிறார். மேலும்  வெற்றிமாறன் மற்றும் சிம்பு படத்தில் நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார். 


இதனைத் தொடர்ந்து இயக்குநர் நெல்சன் இன்று  41வது பிறந்தநாளை கொண்டாடிவருகின்றார் மேலும் அவரது ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருவதுடன்  பல பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தமது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். 


Advertisement

Advertisement