• Dec 25 2024

இதயம் சீரியலில் என்றி கொடுக்கும் பிரபலம்... யார் என்று தெரியுமா? வாழ்த்தும் ரசிகர்கள்...

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் டிவியில் கார்த்திகை தீபம், அண்ணா, நினைத்தாலே இனிக்கும், இதயம் என பல சீரியல்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கார்த்திகை தீபம் தொடர் டிஆர்பியில் டாப்பில் இருந்து வருகின்றன, நாளுக்கு நாள் ஜீ தமிழ் சீரியலுக்கும் அதிக வரவேற்பு தான் கிடைத்து வருகிறது.


இந்நிலையில் ரிச்சார்ட், புவி அரசு, ஜனனி அசோக்குமார் என பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துவரும் தொடர் தான் இதயம். கடந்த 2023ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் இப்போது 300 எபிசோடுகளை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.

சீரியல் நடிகர் அபினாஷ் இதயம் தொடரில் புதிய என்ட்ரி கொடுக்க இருக்கிறாராம். இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள். இன்னும் அவர் எந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க போகிறார் என்று தெரியவில்லை.  

Advertisement

Advertisement