• Dec 27 2024

’சூர்யா 44’ படத்தில் இணைந்த 5 பிரபலங்கள்.. அதிகாரபூர்வமான அறிவிப்பு..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’சூர்யா 44' படத்தில் பணி புரியும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் இன்று ஐந்து முக்கிய தொழில்நுட்ப கலைஞர்களின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அவர்கள் குறித்து தற்போது பார்ப்போம். 

1. ‘சூர்யா 44’ படத்தின் கலை இயக்குனராக ஜாக்சன் என்பவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர்  ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ’விடுதலை’ ’அசுரன்’ போன்ற படங்களில் பணிபுரிந்தவர்.

2. அதே போல் இந்த படத்தின் காஸ்டியூம் டிசைனராக பிரவீன் ராஜா என்பவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ’லியோ படத்தில்’ பணி புரிந்தவர் என்பதும் அடுத்ததாக ரஜினிகாந்த நடிக்க இருக்கும் ’கூலி’ படத்தில் பணி புரிய உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



3. மேலும் இந்த படத்தின் ஸ்டண்ட் இயக்குனராக ஜெயிக்கா என்பவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ’துப்பாக்கி’ ’பாகுபலி 2’ ’ஜவான்’ போன்ற படங்களில் பணிபுரிந்தவர்.

4. மேலும் இந்த படத்தின் படத்தொகுப்பாளராக சபிக் முகமது அலி என்பவர் பணிபுரியவுள்ளார். இவர் ’ஜேடிஎஸ்’ என்ற படத்தில் பணிபுரிந்தவர்.

5. அதேபோல் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக ஸ்ரேயா கிருஷ்ணா என்பவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் தனுஷ் நடித்த ’கேப்டன் மில்லர்’ மற்றும் ’லவ்வர்’ உள்பட சில படங்களில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட 5 தொழில்நுட்ப கலைஞர்கள் இன்று அறிவிக்கப்பட்ட உள்ள நிலையில் அடுத்தடுத்து இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement