• Dec 26 2024

சூப்பர் ஸ்டாரை தொடர்ந்து பிரபல கவர்ச்சி நடிகைக்கும் கிடைத்தது கோல்டன் விசா?

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சட்டப்படி குற்றம் என்ற படத்தில் அறிமுகமான நடிகை தான் கோமல் சர்மா. அதற்குப் பிறகு வைகை எக்ஸ்பிரஸ், பப்ளிக், ஷார்ட் பூட் த்ரீ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் இவர் நடித்த படமும் விரைவில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு  கோல்டன் விசா வழங்கப்பட்டது போல தற்போது கவர்ச்சி நடிகையாக காணப்படும் கோமல் சர்மாவுக்கும் கோல்டன் விசா கிடைத்துள்ளது.

அதன்படி ஐக்கிய அரபு அமீரக அரசு கோமதி சர்மாவுக்கு கோல்டன் விசாவை வழங்கி உள்ளது. இவரது திறமை, அர்ப்பணிப்பு, பங்களிப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு அவருக்கு இந்த விசா வழங்கப்பட்டுள்ளது.


தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அருண் விஜய், பார்த்திபன், விஜய் சேதுபதி, திரிஷா, நஸ்ரியா, ராஜலட்சுமி, அமலா பால் உள்ளிட்ட சில நட்சத்திரங்களுக்கு மட்டுமே இந்த கோல்டன் விசா கிடைத்துள்ளது. தற்போது நடிகை கோமல் சர்மாவுக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.


இவ்வாறு தனக்கு கோல்டன் விசா கிடைத்த மகிழ்ச்சியை பற்றி அவர் கூறுகையில், இப்படி ஒரு கௌரவம் கிடைத்ததில் எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சி. தமிழ் திரை உலகில் சில நட்சத்திரங்களுக்கு மட்டுமே இந்த விசா வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது எனக்கும் ஐக்கிய அரபு அமீரக அரசு வழங்கியுள்ளது. அதற்கு மிகப்பெரிய நன்றி. தமிழ்நாட்டைப் போல இனி துபாயும் எனது இன்னொரு வீடு என்று பெருமையாக சொல்லலாம். இதுபோன்ற கௌரவத்தால் எனது பொறுப்புகளை இன்னும் அதிகமாக உணர்கின்றேன். இன்னும் நல்ல விஷயங்களை செய்வதற்கு உந்து சக்தியாக அமையும். இதனால் மற்றவனுக்கும் நல்லது செய்ய முயற்சிப்பேன் என கூறியுள்ளார்.


Advertisement

Advertisement