விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரத்திற்கான புதிய கதைக்களம் என்ன என்று வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என விரிவாக பார்ப்போம்.
அதன்படி ஏற்கனவே மீனாவை பழி வாங்குவதற்காக விஜயாவின் பரதநாட்டிய வகுப்பில் சேருகின்றார் சிந்தாமணி. ஆரம்பத்திலேயே விஜயாவுக்கு குரு தட்சனை என பணம், சேலை என்பவற்றை கொடுக்கின்றார். அது மட்டும் இல்லாமல் விஜயா உடன் கதை கொடுத்து அவருக்கு மீனாவை பிடிக்காது என்பதையும் அறிந்து கொள்கின்றார்.
இந்த நிலையில், மீனாவுக்கு கிடைத்த திருமண மண்டபத்தின் ஓடரை குழப்புவதற்காக விஜயாவிடம் சிந்தாமணி நாடகம் ஆடுகின்றார். அதன்படி உங்களுடைய மருமகள் மீனா அந்த ஆடரை செய்து முடிக்க கூடாது. அதனால் அவர் வீட்டை விட்டு வெளியே போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என சொல்லுகின்றார்.
அதன்படியே விஜயாவும் தனக்கு கையில் அடிபட்டு விட்டதாக நாடகம் ஆடுகின்றார். மேலும் மீனாவிடம் வேலைக்கு மேல் வேலை வாங்குகின்றார். இதனால் மீனா வெளியே போக முடியாத நிலை உருவாகின்றது.
எனினும் தான் செய்ய வேண்டிய வேலைகளை வீடியோ கால் மூலமே இருந்து சமாளித்து விடுகின்றார் மீனா. என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தனது பணியாளர்களுக்கு சொல்லுகின்றார்.
இறுதியில் முத்து மாலையுடன் வந்து நீ ஜெயிச்சிட்ட என்று மீனாவுக்கு தனது பாராட்டுகளை தெரிவிக்கின்றார். இதனால் வழமை போல விஜயா முகம் சுளித்து கொள்ளுகின்றார். இதுதான் தற்போது வெளியான பிரமோ.
Listen News!