• Dec 26 2024

நிலா, அமிர்தாவை கத்தி முனையில் கடத்திச் செல்லும் கணேஷ்! பாக்கியாவுக்கு அடுத்த ஆப்பு ரெடி? பரபரப்பு ப்ரோமோ

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

கணேசின் தந்தைக்கு உடம்பு சரி இல்லை என பாக்கியாவுக்கு போன் மேல் போன் வர, பாக்கியா வேறு வழியின்றி அமிர்தாவையும் நிலாவையும் அழைத்துக் கொண்டு கணேசின் வீட்டுக்கு வருகிறார்கள்.

அங்கு வந்ததும் கணேசன் அப்பாவிடம் என்னாச்சு அப்பா என அமிர்தா கேட்க, அவர் பேச தயங்கிய வேளையில், அங்கு கணேஷ் உள்ளே இருந்து வருவதை பார்த்து பாக்கியா, அமிர்தா வா போகலாம் என வெளியே போக முற்படுகிறார்.


இந்த நிலையில் கதவை இழுத்து சாத்திய கணேஷ், என் பொண்டாட்டியையும் பிள்ளையையும் இங்க விட்டுட்டு போங்க என பாக்கியாவிடம் சொல்கிறார்.

அதெல்லாம் முடியாது என பாக்கியாவும் அமிர்தாவும் சொல்ல, பாக்கியா நிலாவுடன் கதவுக்கு கிட்டே வந்து அமிர்தா வா என கூப்பிடகூப்பிடுகிறார்.

அந்த நேரத்தில் கணேஷ் அமிர்தாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நிலாவையும் அமிர்தாவையும் வேன் ஒன்றில் கடத்திச் செல்கிறார்.

இதன்போது என்ன செய்வது என்று தெரியாமல் பாக்கியா ரோட்டில் நிற்கிறார். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ. இனி இந்த சீரியல் எவ்வாறு நகரும்  என பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement