• Dec 27 2024

வில்லத்தனமாக பிளான் போட்ட கணேஷ்! ஈஸ்வரியின் கண்டிஷன்! அமிர்தா எடுத்த முடிவு?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றை தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்

அதில், கணேஷின் அம்மாவிடம் இருந்து பாக்கியாவுக்கு போன் வர, ஏன் இவங்க போன் பண்றாங்கன்னு குழம்பி போய் போனை எடுக்கிறார் பாக்கியா.

அதன் போது, கணேசின் அப்பாவுக்கு ரொம்பவும் உடம்பு முடியல, இன்னைக்கோ நாளைக்கோன்னு இருக்கிறார். அமிர்தாவையும்  நிலாவையும் பாக்கணும்னு ஆசைப்படுறாரு. ஒரே ஒருக்கா அவங்களை கூட்டிட்டு வாங்க என்று என்று கணேசின் அம்மா சொல்லுகிறார்.

அதற்கு ஏன்? என்னாச்சு? நல்லா தானே இருந்தாரு என பாக்கியா கேட்க, எல்லாம் கவலை தான் காரணம் என பதில் கூறுகிறார் கணேசின் அம்மா.

மீண்டும், ஒரு முறை என்றாலும் அவங்கள கூட்டிட்டு வாங்க அவரை பார்க்கட்டும் என்று சொல்ல,  இப்போ இருக்க சூழ்நிலை அதெல்லாம் முடியுமா என்று எனக்கு தெரியல. வீட்டுல பேசி பார்க்கிறேன். ஆனால் முடியும் என்று உத்தரவும் சொல்ல முடியாது என போனை வைத்து விடுகிறார் பாக்கியா.

இந்த விஷயத்தை எல்லாரிடமும் சொல்ல,  இது ஏதோ பிளான் மாதிரி இருக்கு அங்க போகக்கூடாது என்ன சொல்லி விடுகிறார்கள். மேலும் ஈஸ்வரி, இந்த விஷயத்தை எழிலிடமும்  அமிர்தாவிடமும் சொல்ல வேண்டாம் என கண்டிஷன் போடுகிறார்.


ஆனால் மனசுக்கு கதை பாக்கியா, கணேஷ் அம்மா போன் பண்ணின விஷயத்தையும், அங்க ஈஸ்வரி போக வேண்டாம் என்று  சொன்ன விஷயத்தையும் அமிர்தாவிடம் சொல்ல, ஏன் தான் இப்படி எல்லாம் தப்பா நடக்குது என கலங்குகிறார் அமிர்தா. 

மீண்டும் கணேஷ் அம்மாவிடமிருந்து போன் வர,  டாக்டர் பிழைக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க ஒரே ஒருக்கா அவங்களை கூட்டிட்டு வந்து பத்து நிமிஷம் காட்டிட்டு  கூட்டிட்டு போங்க, கணேசால எந்த பிரச்சினையும் வராது என்று சொல்ல, என்ன செய்வது என்று தெரியாமல் போனை வைத்து விடுகிறார் பாக்கியா.

இதைத்தொடர்ந்து, பாவி அவர்க்கு உடம்பு சரியில்லை என்று இப்படி பொய் சொல்ல வச்சிட்டியே என கணேஷை பிடித்து கத்துகிறார் அவரின் அம்மா.

ஆனா, அமிர்தாவையும் நிலாவையும் இங்க கூட்டிவர எனக்கு வேற வழி தெரியல என்று கணேஷ் ஏதோ ஒரு வில்லத்தனத்தோடு  ஒரு பிளானை வைத்துக் கொண்டுள்ளது போல பேசுகிறார்.

மீண்டும் போன் வந்த விஷயத்தை அமிர்தாவிடம் பாக்கியா சொல்ல, அமிர்தா கலங்கி துடிக்கிறார். நான் வீட்டில் பேசுறேன் என பாக்கியா சொல்லவும், வேணாம் இது சரியா வராது என்று அமிர்தா சொல்லுகிறார். இது தான் இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.

Advertisement

Advertisement