• Dec 25 2024

மூத்த இயக்குநரின் படத்தை ரிஜெக்ட் செய்த கவின்! எந்த படம் தெரியுமா?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’அரண்மனை’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், அந்த படத்தின் நான்காம் பாகமும் உருவாகவுள்ளதாம்.

அதுபோலவே, ’கலகலப்பு’ திரைப்படத்தின் முதல் பாகம், இரண்டாம் பாகம் வெளியான நிலையில் அடுத்ததாக மூன்றாம் பாகத்தை இயக்குவதற்கு சுந்தர் சி திட்டமிட்டுள்ளாராம்.

’கலகலப்பு’ மூன்றாம் பாகத்தில் சிவாவுக்கு பதிலாக கவின் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும், அதற்காக  பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், பிரபல இயக்குநர் சுந்தர் சி, நடிகர் கவினுடன்’கலகலப்பு’ மூன்றாம் பாகத்திற்காக இணைந்ததாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானது என்று கூறப்படுகிறது.


அதன்படி, இயக்குனர் சுந்தர் சியின் மேனேஜர் கூறுகையில், "சுந்தர் சி இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் கவின் நாயகனாக நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது. அது பற்றி இயக்குநர் சுந்தர் சியிடம் நான் விசாரித்தபோது, ​​அது உண்மையல்ல என்று மறுத்தார். மேலும், அனைவரும் தயவுசெய்து உண்மையான அல்லது அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும்." என்றுள்ளார்.

ஆனாலும், இந்த படத்தை கவின் தான் ரிஜெக்ட் செய்ததாகவும் சமூக வலைதளத்தில் பேசப்படுகிறது. எது எப்படியோ, கலகலப்பு 3 இல் கவின் நடிக்கவில்லை.

நடிகர் கவின் இறுதியாக நடித்த' டாடா ' படம் மாபெரும் வெற்றியை பெற்றது. அதன் பின்பு 'ஸ்டார்' படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement