• Dec 26 2024

‘கோட்’ போஸ்டரால் சர்ச்சை.. ரசிகர்களுக்கு தவெக தலைவராக விஜய் இட்ட கட்டளை..

Sivalingam / 4 months ago

Advertisement

Listen News!

விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 5 என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. அதேபோல் விஜய் ஆரம்பித்த கட்சியின் முதல் மாநாடு குறித்த பணிகளும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் பலர் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் ‘கோட்’ படத்தின் ப்ரமோஷன் எதுவும் செய்யக்கூடாது என தனது கட்சி தொண்டர்களுக்கு விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது

அரசியல் தனி, சினிமா தனி என ஆரம்பம் முதலில் பிரித்து வைத்து வேறுபடுத்தி வரும் விஜய், ‘கோட்’ படத்தின் ரசிகர்களின் போஸ்டர்களில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் பெயர் இருந்ததை அடுத்து அவர் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ‘கோட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தால் அதில் விஜய் அரசியல் பேச மாட்டார் என்றும் அதேபோல் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டில் அவர் ‘கோட்’ படத்தை பற்றி பேச மாட்டார் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

Advertisement

Advertisement