• Dec 27 2024

பாக்கியாவுக்கு கோபி கொடுத்த வார்னிங்! கணேஷின் சதியில் சிக்கிய அமிர்தா! பழைய மாவ அரைக்க ஸ்டார்ட் பண்ணிட்டீங்களே…!

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

அதில், கணேசின் அம்மா தொடர்ந்து போன் பண்ணின விஷயத்தையும், அமிர்தாவையும் நிலாவையும் கடைசியாக ஒருமுறை கணேசின் அப்பா பார்க்க ஆசைப்படுகிறார் என்ற  விஷயத்தையும் சொல்ல, அனைவரும் வேண்டாம், இதில் ஏதோ வம்பு இருக்கு அங்கு போக வேண்டாம் என்று தடுக்கிறார்கள்.

ஆனாலும் பாக்கியா , கணேசின் அம்மா அழுததை எடுத்துச் சொல்லவும், ஈஸ்வரி அவரை திட்டுகிறார். நீ தான் பிடிவாத காரியாச்சே... யார் சொன்னாலும் கேக்குறது இல்ல .. ஆனா பேரன் எழிலுக்கு ஒன்றும் ஆக கூடாது. அவனும் அங்க போகக்கூடாது என்று சொல்ல, கோபியும் அங்க போக வேணாம், இதுல ஏதும் பிரச்சனை வந்தா நீ தான் பாக்கணும், யாரையும் கூப்பிட கூடாது  என எச்சரிக்கிறார்.


ஆனாலும் நான் பத்திரமாக கூட்டி போய் கூட்டி வாரேன் என்று பாக்கியா கிளம்பி செல்கிறார். அவர்கள் போய்க் கொண்டிருக்கும் போதே கணேசின் அம்மா கால் பண்ணி, வாரீங்களா என்று கேட்க,  கணேஷ் பக்கத்துல இருந்து கொண்டு யார் எல்லாம் வாறாங்க  என்று கேளுங்க என சொல்கிறார்.

அதற்கு பாக்கியா, நானும்அமிர்தாவும், நிலாவும்  தான் வாரோம்  என்று சொல்ல சந்தோஷப்படுகிறார் கணேஷ்.

இதை தொடர்ந்து, கணேசன் வீட்டுக்கு வந்த அமிர்தா, அங்கு கணேசின் அப்பாவை பார்த்து என்னாச்சு அப்பா? என்று விசாரிக்க, கணேசின் பெற்றோர் இருவருமே எதுவும் பேசாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த நேரத்தில், அப்பாவுக்கு ஒன்றும் இல்லை என்று சொல்லிக் கொண்டு கணேஷ் அங்கு வர, அவரை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள்.

உடனே பாக்கியா, அமிர்தா வா போகலாம் என்று கூப்பிடவும், இது என் வீடு..  என் பொண்டாட்டி பிள்ளைய விட்டுட்டு நீங்க போங்க என்று சொல்லி கதவை அடைக்கிறார். அது எல்லாம் முடியாது என்று அமிர்தாவும் பாக்கியாவும் பயத்துடன் சொல்கிறார்கள்.

இறுதியாக அமிர்தாவின் கழுத்தில் கத்தியை வைத்து,  தனது  குழந்தையையும் வாங்கிக்கொண்டு வேனில் ஏறிச் செல்கிறார் கணேஷ். அவர்களை பின்தொடர்ந்து ஆட்டோவில் செல்கிறார் பாக்கியா. இதுதான் இன்றைய எபிசோட்.


Advertisement

Advertisement