• Dec 26 2024

நான் சாகப்போறேன் என்று மிரட்டும் கோபி.. வீட்டை விட்டு வெளியேறும் ஈஸ்வரி?

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், ராமமூர்த்தி பாக்கியாவிடம் நீங்க நாளைக்கு எங்களை வெளிய போக சொன்னாலும் நாங்க போக தான் வேணும். அதுக்கு காரணம் நாங்க கோபிட அம்மா, அப்பா என்று சொல்ல, அப்படி எல்லாம் இல்லை நீங்க எங்களுக்கு தாத்தா, பாட்டி என்று சொல்லுகிறார் எழில்.

இதைத்தொடர்ந்து ஈஸ்வரி ரூமில் இருக்க, அங்கு சென்ற கோபி , ரொம்பவும் எமோஷனலாக பேசுகிறார். அத்துடன் நடக்கிற எல்லாத்தையும் பாக்கிறத விட செத்துப் போயிடலாம் என்று சொல்லி அழுகிறார். மேலும் எல்லாத்தையும் விட நீங்க எனக்கு சப்போர்ட்டா இல்லை என்று சொல்லி அழுகிறார்.

இதையடுத்து, நீங்களும் என்கூட வந்துடுங்க என்று சொல்ல, ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார். ஆனாலும் நீங்க என் கூட வந்து தான் ஆகணும். இல்லனா எனக்கு செத்திடலாம் போல இருக்கு என்று சொல்ல, இறுதியில் ஈஸ்வரி வேறுவழியின்றி ஒத்துக் கொள்கிறார்.


அதன்பின், பாக்கியாவும், எழிலும் கிச்சனில் சிரித்து பேசிக் கொண்டு இருக்க, அங்கு சென்ற கோபி, என்ன அசிங்கப்படுத்தி நீங்க சந்தோசமா இருக்கீங்களா, உங்களுக்கு ஆப்பு வைக்கிறன் என்று சொல்லிக் கொள்கிறார். அந்த நேரத்தில், செல்வி போன் பண்ணி பாக்கியாவை ஹோட்டலுக்கு கூப்பிட, எழிலிடம் தேவ இல்லாத கதை எல்லாம் வளர்க்காத வேறு வேலை இருந்தா பாரு என்று கோபி முன்னிலையில் சொல்லி செல்கிறார்.

இறுதியாக ராதிகா உடுப்பு பெட்டி எல்லாம் எடுத்து வைத்துவிட்டு போவமா என்று கேட்க, என் கூட அம்மாவும் வரப்போறாங்க என்று சொல்ல, ராதிகா அதிர்ச்சி அடைகிறார்.

மேலும், ஏன் தேவ இல்லாத வேலை பாக்குறீங்க, உங்க அம்மாவுக்கு என்னை பிடிக்காது, என் அம்மாவ பிடிக்காது, நான் கர்ப்பமா இருக்கிறதும் பிடிக்காது இப்போ அங்க வந்தா பிரச்சினை தான் என்று சொல்லுகிறார். ஆனாலும் கோபி பிடிவாதமாக இருக்கிறார். இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement