• Dec 26 2024

சினிமா உனக்கு செட் ஆகாது.. பேசாமல் குழந்தை பெற்றுக்கொள்.. ஹன்சிகாவுக்கு குடும்பத்தார் போட்ட நிபந்தனை?

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

நடிகை ஹன்சிகா நடித்த படங்கள் தொடர்ச்சியாக தோல்வி அடைந்து வருவதை அடுத்து சினிமா இனி உனக்கு செட் ஆகாது, குழந்தை பெற்றுக்கொள் என்று அவருடைய குடும்பத்தினர் வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை ஹன்சிகா கடந்த 2011 ஆம் ஆண்டுஎங்கேயும் காதல்என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நிலையில் அதன் பின்னர் தனுஷுடன்மாப்பிள்ளைவிஜய்யுடன்வேலாயுதம்சூர்யாவுடன்சிங்கம் 2’ என வரிசையாக வெற்றி படங்களில் நடித்தார்




இந்த நிலையில்பிரியாணி’ ’மான் கராத்தே’ ’அரண்மனை’ ’வாலு’ ’அரண்மனை 2’ ’மனிதன்என தொடர்ச்சியாக வெற்றி படங்களில் நடித்துக் கொண்டிருந்த ஹன்சிகாவுக்கு திடீரென ஒரு சறுக்கல் ஏற்பட்டது. அவர் நடித்த படங்கள் தொடர்ச்சியாக தோல்வி அடைந்து கொண்டிருந்த நிலையில் அவர் தனது 50 வது படமானமகாபடத்தை மலைபோல் நம்பினார். சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த இந்த படமும் தோல்வியடைந்த நிலையில் அதன் பிறகு அவருக்கு சொல்லிக் கொள்ளும்படி எந்த படமும் இதுவரை வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில் ஹன்சிகா கடந்த 2022 ஆம் ஆண்டு சோஹேல் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இனி சினிமாவில் நடித்தது போதும், குழந்தை பெற்றுக் கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடுஎன்று அவருடைய குடும்பத்தினர் வலியுறுத்தி வருவதாகவும், தற்போது கைவசம் இருக்கும் படங்களை முடித்துவிட்டு அனேகமாக ஹன்சிகா திரையுலகில் இருந்து விலகி விடுவார் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement