• Dec 26 2024

லேடி சூப்பர் ஸ்டாரின் மகன்களுக்கு பிறந்த நாள்.. குவியும் வாழ்த்துக்கள்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா தற்போது தனது கேரியரில் மட்டும் கவனம் செலுத்தாமல் குடும்பம் மீதும் மிகுந்த அக்கரையாக இருந்து வருகின்றார். தான் செல்லும் பட ஷுட்டிங் இடங்களுக்கு எல்லாம் தனது கணவர் பிள்ளைகளுடன் நேரத்தை செலவிட்டு வருகின்றார்.

ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நயன்தாரா. இவர் மலையாள நடிகை என்றாலும் தமிழில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்பட்டார்கள். அதேபோல பல முன்னணி நடிகர்களுடன் நடித்து இன்று வரை டாப் 5 நடிகைகளுள்  ஒருவராக காணப்படுகின்றார்.

இதைத்தொடர்ந்து தனது சொந்த வாழ்வில் பல ஏற்ற இறக்கங்களை கண்டிருந்தாலும் இறுதியில் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதற்குப் பிறகு வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாயானார். உயிர் உலக்கென இரண்டு குழந்தைகளையும் கண்ணென கவனித்து வருகின்றார்கள்.


சமீபத்தில் தனது காதல் கணவரான விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை துபாயில் நண்பர்களுடன் கொண்டாடியிருந்தார் நயன்தாரா. இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில், தற்போது விக்னேஷ் சிவன் - நயன்தாரா தமது மகன்களின் பிறந்த நாளை முன்னிட்டு நெகிழ்ச்சி பதிவொன்றை பதிவிட்டுள்ளார். மேலும் மகன்களுடன் இயற்கை காட்சியை ரசிக்கும் போட்டோ ஷூட்டையும் செய்துள்ளார்கள். தற்போது குறித்த புகைப்படங்கள் இணையத்தை கவர்ந்து வருகின்றன.

Advertisement

Advertisement