• Dec 27 2024

100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்ததா 'ஆர்டிகில் 370' .. சண்டைக் காட்சிகளில் புரட்டியெடுத்த தமிழ் நடிகை

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

மாடலாக தனது வாழ்க்கையை ஆரம்பித்து, பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் தான் யாமி கௌதம்.

ஹிந்தியில் வெளியான விக்கி டோனர் என்ற தனது முதல் படத்தின் மூலம் புகழை உச்சிக்கே சென்றார். தற்போது ஹிந்தியில் முழு நேர நடிகையாகவே வலம் வருகிறார்.

2013ஆம் ஆண்டு தமிழில் வெளியான கௌரவம் படத்திலும், 2016 ஆம் ஆண்டு ஜெய்யுடன் தமிழ்ச்செல்வம் தனியார் அஞ்சலும் படத்திலும் நடித்திருந்தார். இவரது படங்கள் தமிழில் பெரிதாக ஹிட் அடிக்காத போதும், ஹிந்தியில் நல்ல வரவேற்பை இவருக்கு பெற்றுக் கொடுத்துள்ளது.

அதன்படி நடிகை யாமி கௌதம், பிரியாமணி இணைந்து நடித்து படம் தான் ஆர்டிகில் 370  திரைப்படம்.


ஆர்டிகில் 370  திரைப்படம் பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி வெளியாகியது. இந்த படத்தை யாமி கௌதமின் கணவர் தயாரித்துள்ளார்.

இந்த நிலையில், இந்த படம் இதுவரையில் 106. 40 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதில் இடம்பெற்ற யாமி கௌதமின் சண்டை காட்சிகள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மலையாளத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் மற்றும் பிரேமலு ஆகிய  திரைப்படங்கள் 100 கோடியை தாண்டி வசூலில் சாதனை படைத்த நிலையில், அது தொடர்பில் பல்வேறு செய்திகள் மிகவும் பரபரப்பாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது.

ஆனாலும் சத்தம் இன்றி 100 கோடி ரூபாய் வரை வசூலித்த இந்த படம் வசூலித்து உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement