• Dec 26 2024

அருணுக்கு ஆதரவாக இணையத்தில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்! அர்ச்சனா செய்த காரியம்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டு தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது. இம்முறை 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டதோடு ஒரே வீட்டில் கேர்ள்ஸ் டீம் பாய்ஸ் டீம் என பிரிக்கப்பட்டு டாஸ்க்குகள வைக்கப்பட்டு வருகின்றன.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7 சீசன்களையும் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். ஆனாலும் இதன் எட்டாவது சீசனின் ஆரம்பத்திலேயே தன்னால் இதில் கலந்து கொள்ள முடியாது என விலகி இருந்தார். அதற்கு காரணம் அவருக்கு அதிகளவான பட சூட்டிங் இருப்பது தான். அத்துடன் அவர் அமெரிக்காவில் ஏஐ டெக்னாலஜியை கற்று வருவதாகவும் கூறப்பட்டது.

இதை தொடர்ந்து உலகநாயகன் கமலஹாசன் இடத்திற்கு வரப்போறாது யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சூர்யா, சிம்பு, அரவிந்த்சாமி,  விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோரின் பெயர்கள் அடிபட்டுள்ளன.. இறுதியில் விஜய் சேதுபதி தான் இதற்கு சரியானவர் என தேர்ந்தெடுக்கப்பட்டார்.


அந்த வகையில் பிக் பாஸ் எட்டாவது சீசன் விஜய் சேதுபதியால் தொகுத்து வழங்கப்பட்டு வருகின்றது. ஆரம்பத்திலேயே இவரது பேச்சுக்கும் ஸ்டைலுக்கும் ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தார்கள். போட்டியாளர்களை அதிக அளவில் பேச விடாமல் தானும் அதிக அளவில் பேசாமல் குறிப்பிட்ட கருத்துக்களை சொல்லி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார்.

இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னரான அர்ச்சனா ரவீந்திரன் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் அருணுக்கு ஆதரவாத ஹேஷ்டேக் ஒன்றை ட்ரெண்ட்டாக்கி வருகின்றார். இது தொடர்பான வீடியோ ஒன்றையும் தனது இன்ஸ்டா  ஸ்டோரியில் வைத்து அருனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

அதாவது கடந்த வாரங்களில் அருணை விசாரித்த விஜய் சேதுபதி சைக்கிள் கேப்பில் அவரை நோண்டியாக்கி இருப்பார். தற்போது குறித்த வீடியோவை வைத்து அருணுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றார்கள்.


Advertisement

Advertisement