• Dec 25 2024

விஷால் இயக்கி நடிக்கும் ‘துப்பறிவாளன் 2’! படப்பிடிப்பு எப்போது தெரியுமா?

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, அனு இம்மானுவேல், ஆண்ட்ரியா உட்பட பலர் நடித்து ஹிட்டான படம், ‘துப்பறிவாளன்’. கடந்த 2017-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில வருடங்களுக்கு முன் தொடங்கியது. முதல் பாகத்தில் நடித்தவர்கள் இதிலும் நடிக்கிறார்கள். 


இதன் படப்பிடிப்பு லண்டனில் நடந்து வந்தபோது விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் படத்தின் தயாரிப்பாளரான விஷால், மிஷ்கினை படத்தில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். பின்னர் ‘துப்பறிவாளன் 2’ படத்தை தானே இயக்கி நடிக்கப் போவதாகவும் கூறியிருந்தார்.


அவரே தயாரித்து, நடித்து இயக்க இருப்பதால் அதற்கான முதற்கட்டப் பணிகளை கவனித்து வந்தார். தற்போது அனைத்து பணிகளும் முடிந்துவிட்டதால், அடுத்த மாதம் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார் விஷால். முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து லண்டன், அஜர்பைஜான், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் படப்பிடிப்பு நடைபெறஇருக்கிறது. 

Advertisement

Advertisement