• Dec 24 2024

சூர்யாவின் மகள் தியாவை பார்த்தீர்களா? திருமண நிகழ்வில் ஜொலித்த குடும்பம்.. வைரல் போட்டோ

Aathira / 15 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக காணப்படுபவர் தான் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக கங்குவா திரைப்படம் வெளியானது. சுமார் 400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் நெகட்டிவ் கமெண்ட் செய்தால் தோல்வியை சந்தித்தது.

இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் தனது 44வது படத்தின் மீது கவனம் செலுத்தி வருகின்றார் சூர்யா. அத்துடன் ஆர்.ஜே பாலாஜி இயக்கும் படத்திலும் கமிட் ஆகியுள்ளார். இந்த படங்கள் மீது சூர்யாவின் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்துள்ளார்கள்.


சூர்யாவின் குடும்பம் ஏற்கனவே மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்கள். இது தொடர்பான பல வதந்திகளும் பரவி இருந்தன. ஆனால் ஜோதிகா குழந்தைகளின் படிப்பு, அவருடைய பெற்றோருடன் இருக்க வேண்டும் போன்ற சில காரணங்களுக்காக தான் மும்பையில் செட்டில் ஆனதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், நடிகர் சூர்யாவின் குடும்பத்தினர் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது. அதில் அவருடைய மகன் மற்றும் மகள் வளர்ந்து பெரியவர்களாக காணப்படுகின்றார்கள்.

இதை பார்த்த ரசிகர்கள் சூர்யாவின் மகனும் மகளும் எவ்வளவு பெரிதா வளர்ந்துட்டாங்க என்று கமெண்ட் பண்ணி வருகின்றார்கள். தற்போது குறித்த புகைப்படம் வைரலாகி வருகின்றது.



Advertisement

Advertisement