• Jan 27 2025

நேரில வந்தா கொன்னுடுவேன்! மிரட்டிய கஞ்சா கருப்பு

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

பெரும்பலானா திரைப்படங்களில் காமெடியனாக ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்தவரே கஞ்சா கருப்பு.எனினும் அவருக்கு தற்போது படத்துக்கான வாய்ப்புக்கள் குறைந்து காணப்படுகின்ற நிலையில் தனது ஓய்வு நேரத்தை குடும்பத்துடன் கழித்து வந்துள்ளார்.


திரை நட்சத்திரமாக இருந்த போதும்  அவர் சொந்த வீட்டில் இருக்காது வாடகை வீட்டிலேயே  இருந்ததாக இப்பொழுது ஒரு செய்தி கிடைத்துள்ளது.இவர் மதுரையில் ஒரு வாடகை வீட்டில் இருந்ததாக அந்த வீட்டின் உரிமையாளர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.மேலும் அவர் அது பற்றி கூறுகையில்"தனது வீட்டை கஞ்சா கருப்புவிற்கு  2021 வாடகைக்கு விட்டதாக கூறியதுடன்.முதல் 2 வருடங்களே அவர் ஒழுங்காக வாடகை செலுத்தியதாகவும்.

d_i_a

பின்னர் வாடகை தருவதற்கு மறுத்ததாகவும், தான் வீட்டை காலி செய்ய சொன்ன போது அதனை மறுத்ததாகவும்" கூறியுள்ளார்.மேலும் கூறிய இவர்" கஞ்சா கருப்பு தனது வீட்டை வேறு ஒருவர் தங்க வழங்கியதாகவும் கூறியிருந்தார். அதற்கு  பிறகு தான் சென்று பார்த்த போது அங்கே மதுபான போத்தல்கள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.



மேலும் வீட்டை விட்டு செல்லும் படியாக notice ஒன்றினை வழங்கிய போது அவரது மனைவி வீட்டை விட்டு வெளியேறுவதாகவும் வாடகையை செலுத்துவதாகவும் கூறினார்.பின்னர் தனது சொந்தக்காரரை விட்டு கதைத்ததாகவும் கூறிய அவர் கஞ்சா கருப்பு நேரில் வந்தால் "தன்னை கொன்னே போட்டிருவான் "என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.மேலும் தான் மிகுந்த மனஉளைச்சலில் இருப்பதாகவும் ,தனது வீட்டை காவல்துறை மீட்டுத்  தருமாறும் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement