• Jan 27 2025

மகிழ் திருமேனிக்கு எதிராக உதயநிதி கொடுத்த அதிரடி சர்டிபிகேட்.! கிளம்பிய புது சர்ச்சை

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான கழகத் தலைவன், தடம், மேகாமம், தடையறத் தாக்க ஆகிய படங்கள் ஆக்சன் திரில்லர் நிறைந்த படமாக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.  

இதைத்தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கின்றது, மேலும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா, இவர்களுடன் அர்ஜுன், ரெஜினா ஆரவ் ஆகிய பிரபலங்களும் இணைந்துள்ளார்கள்.

d_i_a

விடாமுயற்சி திரைப்படம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக எடுக்கப்பட்டு வருகின்றது. தற்போது இந்த படத்தின் ரிலீஸும் தள்ளிப் போய்க் கொண்டு உள்ளன. விடாமுயற்சி படத்தின் தாமதத்திற்கு காரணம் மகிழ் திருமேனி என்றும் இன்னொரு சாரார் அஜித் எனவும் கூறப்பட்டது.


அந்த வகையில் விடாமுயற்சி திரைப்படத்தின் தாமதத்திற்கு மகிழ் திருமேனி தான் காரணம் என வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் அஜித்துக்கும் மகிழ் திருமேனிக்கும் சண்டை எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

இதை தொடர்ந்து சமீபத்தில் மகிழ் திருமேனி வழங்கிய பேட்டி ஒன்றில், வலைப்பேச்சு அந்தணனை மறைமுகமாக தாக்கி இருந்தார். எனக்கும் அஜித்துக்கும் சண்டை என பக்கத்தில் இருந்து பார்த்தது போலவே பேசி உள்ளார்கள். அதை நிரூபித்தால் நான் சினிமாவை விட்டு விலகக்கூட தயார் என வலைப்பேச்சு டீமில் உள்ளவர்களுக்கு சவால் விட்டிருந்தார் மகிழ் திருமேனி.


இந்த நிலையில், வலைப்பேச்சு அந்தணன் கழகத் தலைவன் பட விழாவில் உதயநிதி கொடுத்த பேட்டி ஒன்றை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து மகிழ் திருமேனிக்கு பதிலடி கொடுத்துள்ளார். 

அதில் உதயநிதி தான் நடித்த கழகத் தலைவன் படத்திற்கு ரொம்ப நாட்கள் இழுத்தடிக்கப்பட்டதாகவும், ஒரு சீனையே பல தடவை மகிழ் திருமேனி வைத்து எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் உதயநிதியின் பேட்டியை பகிர்ந்த வலைப்பேச்சு அந்தணன், விடாமுயற்சி லேட் ஆனதற்கு மகிழ் திருமேனியும் ஒரு காரணம் என்று சொல்லி இருந்தோம்.. அதற்கு எங்களை வசைபாடி  இருந்தார் மகிழ் திருமேனி... இப்போது உதயநிதி கொடுத்த சர்டிபிகேட் தான் நமது பதில்.. என தெரிவித்துள்ளார்.  

Advertisement

Advertisement