• Dec 25 2024

இலங்கை திரும்பிய இசைக்குயில் அசானி... மாலை போட்டு வரவேற்ற ரசிகர்கள்... வைரல் புகைப்படம் இதோ..

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் மற்றும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சி இந்த இரண்டு பாடல் நிகழ்ச்சிகளுமே மிகவும் பிரபலம். இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்று பலரும் போட்டிபோட்டு கலந்துகொள்கிறார்கள். 


தற்போது சூப்பர் சிங்கர், சரிகமப இரண்டிலும் சிறுவர்களுக்கான நிகழ்ச்சி நடந்து நிறைவுக்கு வந்தது. ஜீ தமிழின் சரிகமப நிகழ்ச்சியில் இலங்கை குயில்கள் இரண்டு தங்களது திறமையை காட்டுவதற்காக சரிகமப நிகழ்ச்சிக்கு சென்றனர்.


அதில் கில்மிஷா தனது பாடல் திறமையை இறுதிவரை காட்டி ரசிகர்களால் அதிக வாக்குகள் வழங்கப்பட்டு நேற்று நடைபெற்ற சரிகமப நிகழ்ச்சி பைனலில் வெற்றி பெற்றார். மற்றும் நிகழ்ச்சியின் பாதியில் இலங்கை பெண் அசானி கலந்து கொண்டு தனது திறமையை காட்டி இறுதி 10 பேருக்குள் தெரிவாகி இருந்தார்.  


இந்நிலையில் நேற்று சரிகமப நிகழ்ச்சி நிறைவு பெற்றதை அடுத்து இலங்கை குயில் அசானி இன்று இலங்கை வந்தடைந்துள்ளார். விமானநிலையத்தில் அசானிக்கு ரசிகர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்...    



Advertisement

Advertisement