• Apr 18 2026

‘தி ராஜா சாப்’ படத்தின் புதிய ட்ரெய்லர் எப்படி.? பிரபாஸ் ஜோக்கரா நடிக்கிறாரா.?

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ராஜா படத்தின்  முன்னோட்ட விழா ஹைதராபாத்தில் நடைபெற்ற போது அதில்  பல நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் என பலரும் கலந்து கொண்டு உள்ளனர்.

இந்த படத்தில் சஞ்சய் தத் ஒரு கேரக்டரில் நடித்துள்ளார். அவர் ஒரு காட்சியில் நடித்தாலும் அந்த முழுக் காட்சியும் அவருடையதாகிவிடும். பிரபாஸும் படத்தில் மிரட்டி உள்ளார். 

இந்த நிலையில், நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘தி ராஜா சாப்’ படத்தின் புதிய ட்ரெய்லரை படக்குழு  வெளியிட்டுள்ளது. இந்தப் படம் வரும் ஜனவரி 10-ம் தேதி வெளியாக உள்ளது.


இந்த புதிய ட்ரெய்லரின் ரன்னிங் டைம் 3.12 நிமிடங்கள் இடம் பெற்றுள்ளது.  மாய வீட்டுக்குள் செல்லும் பிரபாஸ் மற்றும் அவருடைய குழுவினர் அங்கிருந்து தப்பித்தார்களா என்பது போன்ற காட்சிகள் இதில் இடம் பெற்றுள்ளது. 

அதன் கடைசி ஷாட்டில் பேய் வருவது போல் வேடம் அணிந்துள்ளார் பிரபாஸ்.  இது ஹாலிவுட் படமான ஜோக்கர் பாத்திரத்தையும் நினைவுபடுத்தும் வகையில் காணப்படுகின்றது.

Advertisement

Advertisement