• Apr 18 2026

குழந்தை பெத்துக்க மாட்டேன்.. ஏனென்றால்.. நடிகை வரலட்சுமி சரத்குமார் விளக்கம்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

நடிகர் சரத்குமாரின் மகளும், தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவருமான வரலட்சுமி சரத்குமார், சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறிய கருத்துகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

குறிப்பாக, “நான் ஏற்கனவே தாயாகிவிட்டேன்...” என்ற அவரது கருத்து, ரசிகர்களையும் பொதுமக்களையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

வரலட்சுமி சரத்குமார் கடந்த ஆண்டு தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்ட அந்த திருமணம், எளிமையாகவும், அழகாகவும் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இருவரும் மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்தி வருவதாகவும், ஒருவருக்கொருவர் புரிதலுடன் பயணித்து வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வரலட்சுமி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தாய்மை, குழந்தை பெறுதல், பெண்களின் தனிப்பட்ட முடிவுகள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.


அந்த பேட்டியில் வரலட்சுமி, “தாய்மை என்பது மிகப் பெரிய விஷயம் தான். ஆனால் ஒரு குழந்தையை பெற்றால் தான் ஒருவர் தாய் ஆகிவிடுவார் என்று நான் நினைப்பதில்லை.” என்று கூறியுள்ளார். அவரது இந்த கருத்து பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும்,“எனக்கு தற்போது குழந்தை பெற்றுக்கொள்வதில் விருப்பமில்லை. ஒருவேளை எதிர்காலத்தில் அந்த முடிவு மாறலாம். ஆனால் இப்போதைக்கு அந்த எண்ணம் இல்லை. நான் என் தங்கைக்கும், நாய்க்கும் தாயாக இருக்கிறேன். 

என்னை சுற்றியுள்ளவர்களை நன்றாக பார்த்துக்கொள்கிறேன். அதுதான் என்னை பொறுத்தவரை தாய்மை. ஒரு பெண் பெற்றுக்கொள்ளக்கூடாது என்று முடிவெடுப்பதே parentingகான சிறந்த முடிவு." என்று அவர் தெளிவாக தெரிவித்துள்ளார்.

ஒருவரின் வாழ்க்கையில் அக்கறை, பொறுப்பு, பாதுகாப்பு உணர்வு ஆகியவையே தாய்மையின் அடையாளம் என்றும், அது கட்டாயமாக குழந்தை பெற்றுக்கொள்வதால் மட்டும் கிடைப்பதில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

Advertisement

Advertisement